நீங்கள் வாங்கிய கருங்காலி மாலை உண்மையானதா? கண்டுபிடிக்கும் எளிய வழி இதோ..!!

By Kalai Selvi  |  First Published Sep 15, 2023, 4:42 PM IST

மிகவும் சக்தி வாய்ந்த மாலைகளில் ஒன்று கருங்காலி மாலை. மருத்துவம் ஆன்மீகம் ஜோதிடம் என பல விதங்களில் இவை நமக்கு நன்மைகளைத் தருகிறது தெரியுமா?


நம் நாட்டில் இருக்கும் சில மரங்களில் பல அற்புதமான சக்திகள் நிறைந்துள்ளது. அவற்றில் மிக முக்கியமரம் என்று சொன்னால் அது கருங்காலி மரம் தான். ஏனெனில் இந்த மரம் இருக்கும் இடத்தில் இடி, மின்னலால் பாதிப்பு ஏற்படாது, சொல்லப்போனால் இயற்கை சீற்றங்கள் எதுவும் அண்டாது. எனவே தான் பண்டைய காலங்களில் கோவில் கோபுர கலசத்தில் நவதானியங்களோடு கருங்காலி கட்டையையும் சேர்த்து வைத்து கும்பாபிஷேகம் பண்ணுவர். மேலும் தீய சக்தி மந்திர பிரயோகங்களை ஒருநொடியில் பயனற்று போக செய்ய கூடியது இந்த மரம். எனவே, நீங்கள் இந்த மரத்தால் செய்யப்பட்ட கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அணிவதால் தீய சக்திகள் எதுவும் உங்களை அண்டாது. அது மட்டுமல்லாமல் குலதெய்வத்தின் அருளையும் உங்களுக்கு தடையிடாமல் தரக்கூடிய சக்தி இதற்கு உண்டு. கருங்காலி மாலையானது 108 மணிகளைக் கொண்டு மாலையாக செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அணியும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா?

Latest Videos

undefined

கருங்காலி மாலை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:
கருங்காலி மாலையை ஆண் பெண் என இருவரும் அணியலாம். கருங்காலி மாலையை நம் கழுத்தில் அணிந்தால் உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் கட்டுப்படும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிவதால் அவர்கள் தோஷம் நீங்கும்.

இவை, நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ஜீரணக் கோளாறு நீக்கவும், மாதவிடாய் கோளாறு சரி செய்யவும், மலட்டுத்தன்மை நீக்கவும், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், மாங்கல்ய பலத்தை பலப்படுத்தவும், ஆண்மை அதிகரிக்கவும், கோபத்தை கட்டுப்படுத்தவும், மன பயத்தை நீக்கி தைரியத்தை வரவழைக்கவும், பேச்சுத்திறமை அதிகரிக்கவும், வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிடைக்கவும், விபத்தை தடுக்கவும், நமக்கு நேரிடும் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கவும், கணவன் மனைவி பிரச்சினையை சரி செய்யவும், மேலும் அவர்களது உறவு மேம்படவும், என இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அவ்வளவு நன்மைகள் இதில் நிறைந்துள்ளது.

கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்?
கருங்காலி மாலையை மேஷம் விருச்சகம் என இரு ராசிக்காரர்களும் அணியலாம். அதுபோல் அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணியலாம். மேலும் செவ்வாய் அன்று பிறந்தவர்களும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை பிறந்தவர்களும் இந்த மாலையை அணியலாம். இது அவர்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும்.

உண்மையான கருங்காலி மாலையை  கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் வாங்கிய கருங்காலி மாலை உண்மையானதா என்பதை கண்டறிய முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் அந்த மாலையை தண்ணீரில் போடுங்கள். மாலையில் சாயம் போனாலோ, தண்ணீரின் நிறம் கருப்பாக மாறினாலோ அல்லது ஒரு வேளை தண்ணீரின் நிறம் மாறாமல் இருந்தாலோ அது போலி மாலை அகும். உண்மையான கருங்காலி மாலை தண்ணீரில் போட்ட சிறிது நேரத்திலே அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியிருக்கும். அதுமட்டுமல்லாமல் கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் எண்ணெய் படலம் போன்று மிதக்கும். இப்படி மிதந்தால் அதுதான் உண்மையான கருங்காலி மாலைக்கு அடையாளமாகும்.

இதையும் படிங்க:  கருங்காலி மாலை அணிவதால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

மற்றொரு முறை என்னவென்றால், நீங்கள் வாங்கிய கருங்காலி மாலையில் இருக்கும் மணி ஒன்றை உடைத்து அது கருப்பு மற்றும் காபி பிரெளன் நிறத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை, அது வெள்ளை நிறமாகவோ அல்லது மரத்தின் நிறத்தில் இருந்தாலோ அது போலி கருங்காலி மாலை ஆகும்.

click me!