எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் நல்லது!!

By Dinesh TG  |  First Published Sep 17, 2022, 6:12 PM IST

பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வருவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெற முடியும். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு  விளக்கேற்றினால் என்ன பலன்களை நாம் பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
 


இந்துக்களின் பாரம்பரியங்களில் ஒன்று தான் தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது. ஆன்மீகத்தின் வெளிப்பாடு தான் விளக்கேற்றுவது. இறைவனுக்கு  விளக்கேற்றி வணங்குவதன் மூலம் அறியாமை இருள் விலகி, அறிவு பெருகி வருகிறது. நமது இல்லமும் புனிதம் அடைகிறது. வளமும்ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. நமது வாழ்வில்  பாவங்களை துடைக்கின்றது. மனதின்  தீய எண்ணங்களை எரிக்கின்றது.

பலரும் பல வித எண்ணெய்களை விளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பயன்படுத்துவர். ஆன்மீகத்தை  பொறுத்தவரையில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருளும், பலனும் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு  அமைதியை கொண்டு வரலாம்.
 
நல்லெண்ணெய்: இறைவனுக்கு தூய்மையான நல்லெண்ணெய் தீபம் உகந்ததாக கருதப்படுகிறது. இதைக்கொண்டு விளக்கேற்றி வந்தால் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவகிரகங்களையும் இதன் மூலம் திரும்தி படுத்தலாம்.

Latest Videos

undefined

 நெய்: இதில் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதோடு நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

விளக்கெண்ணெய்: இதன் மூலமாக தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?
 
வேப்ப எண்ணெய்: இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் கணவம் மனைவி இருவருக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விலகி உறவு  மேம்படும்.

மூன்று எண்ணெய் கலவை: வேப்ப எண்ணெய், நெ, இலுப்பை எண்ணெய் ஆகிய மூன்றையும், கலந்து தீபம் ஏற்றினால் அதன் பலனாக வீட்டில் செல்வம்  நிலைத்திருக்கும்.

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?
 
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றி வந்தால் விநாயகரின் அருளை பெற முடியும். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்ச்சியாக  இருக்கலாம்.
 
பஞ்ச தீப எண்ணெய்: நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் , இலுப்பைஎண்ணெய் ,மற்றும் பசுநெய் ஆகியவற்றை கலந்து செய்த எண்ணெய் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால், துன்பங்களை போக்கி எல்லா வளங்களையும்  கொடுக்கும்.

click me!