வீட்டில் பணம் புழங்க.. மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போடுங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 6, 2024, 6:00 PM IST

Money Plant Vastu Tips For Money : வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமானது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை அதில் சேர்க்கவும்.


வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி, எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று வாஸ்து சொல்கிறது. வீட்டில் மட்டுமின்றி, வேலை பார்க்கும் இடத்திலும் கூட இந்தச் செடியை வைக்கலாம். இதனால் அங்குள்ள சூழ்நிலையை முற்றிலும் நேர்மறையாக மாறும்.

உங்களுக்கு தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரண்டு பொருட்களை மணி பிளான்ட் நடும்போது அதில் போட்டால் மகிழ்ச்சி பொங்கும், வளம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, அந்த இரண்டு பொருட்கள் என்ன..? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..? என்பதையும் குறித்து இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Tap to resize

Latest Videos

undefined

வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள மணி பிளான்டின் ரகசியம்...

நீங்கள் மணி பிளான்ட் நடும்போது அந்த மண்ணில் சிறிது பால் சேர்த்துக் கொள்ளுங்கள். வாஸ்துபடி இப்படி செய்தால், உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதர கஷ்டங்களும் நீங்குவது மட்டுமின்றி, உங்கள் கடனையும் நீங்கள் விரைவில் அடைப்பீர்கள். இது தவிர உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்று வாஸ்து சொல்கிறது. அதுமட்டுமின்றி செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும்.

இரண்டாவதாக, மணி பிளட் நடும்போது சர்க்கரையும் சேர்ப்பது மங்களகரம் என்று வாஸ்து சொல்கிறது. இப்படி செய்வதன் மூலம் நல்ல லாபத்தை நீங்கள் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ராகுவின் தீய பார்வையில் சிக்காமல் இருப்பீர்கள். மேலும் உங்களது வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் விரைவிலே நீங்கும்.

வாஸ்துபடி மணி பிளான்ட் எந்த திசையில் வைப்பது நல்லது?:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் மணி பிளான்டை எந்த மூலையில் வைத்தாலும் அதன் தாக்கம் சாதகமாக இருக்காது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மணி பிளான்டை உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சரியான திசையில் வைத்தால் மட்டுமே உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, மணி பிளான்ட் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் தென்திசையில் வைக்க வைப்பது தான் மங்களகரமானது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. வாஸ்துபடி, இது மங்களகரமான திசையாக கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் நீங்கள் மணி பிளான்ட் வைத்தால் உங்கள் வீட்டில் செல்வமும், அமைதியும் நிறைந்திருக்கும் அதுமட்டுமின்றி, மேலே சொன்ன இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் மணி பிளான்டை நடும்போது அதில் வைத்தால் கூடுதல் பலன்களையும் நீங்கள் பெறுவீர்கள்.

லட்சுமி தேவியின் அருள் பெற:

நீங்கள் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் மணி பிளான்ட் நடும்போது அதன் அடிவாரத்தில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை கட்டுவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. ஆனால், அவற்றை கட்டுவதற்கு முன் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். 

அதாவது, நீங்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, புதிய ஆடை அணிந்து, பிறகு செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை வழிபட்டு, அந்த நூலை லட்சுமி தேவியின் காலடியில் வைத்து வணங்கி, பிறகு அதை மணி பிளான்ட் செடியில் அடிப்பகுதியில் கட்ட  வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் மற்றும் உங்களது வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் மற்றும் உங்களது நிதிநிலைமையும் மேம்படும்.

click me!