உங்க குலதெய்வம் யாருனு தெரியலையா? இந்த 1 காரியத்தை செய்தாலே குலதெய்வம் அருள் பூரணமா கிடைக்கும்!! 

By Kalai Selvi  |  First Published Jul 6, 2024, 5:10 PM IST

Find Kula Deivam : உங்கள் குலத்தை பாதுகாக்கும் குலதெய்வம் யாரென உங்களுக்கு தெரியவில்லை என்றால் எவ்வாறு வழிபாடு செய்து குலதெய்வ அருளை பெற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள். 


நம்முடைய வம்சம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம் குலதெய்வத்தை தவறாமல் வழிபடுபவர்களுக்கு வீட்டில் பிரச்சனைகள் வருவதே கிடையாது. எந்த தீங்கு வந்தாலும் அதிலிருந்து நம்மை காத்து பரம்பரை பரம்பரையாக நம் குலம் காக்கும் தெய்வமே குலதெய்வம். ஒவ்வொரு துன்பத்திலும் நம்முடைய கஷ்டத்தை போக்கி வழிநடத்தும் குலதெய்வத்தை சிலருக்கு தெரியாது. எல்லா தெய்வ வழிபாட்டை விடவும் குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு முக்கியம். சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் யார் என்று தெரியாது. அவர்கள் எப்படி குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

குலதெய்வத்திற்கு பரிகாரம்: 

Tap to resize

Latest Videos

undefined

குலதெய்வத்திற்காக இந்த பரிகாரத்தை ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் ஆறாவது வெள்ளிக்கிழமையன்று உங்களுடைய குலதெய்வம் யார் என்பது குறித்து உங்களுக்கு நிச்சயமாக தெரியவரும். அதன்பின்னர் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்தால் உங்களுக்கு பூரணமான அருள் கிடைக்கும். 

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நீங்கள் நொச்சி மரக்கன்றை வாங்கி நட வேண்டும்.  இந்த மரத்திற்கு குலதெய்வத்தை உங்களிடம் ஈர்த்துக் கொண்டு வரும் சக்தி உண்டு. இந்த நொச்சி மரம் மருத்துவ குணங்கள் கொண்டது. உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால் கூட ஆவி பிடிக்கும்போது சில நொச்சி இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.  மருத்துவ குணத்தில் நொச்சி இலைகள் பெரும் பங்கு வகித்தாலும், ஆன்மீகத்திலும் இவை தெய்வ அம்சம் கொண்டவை. 

இதையும் படிங்க:  இந்த 3 ராசிக்காரங்க திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போகவே கூடாதாம்!! மீறி போனால் அவ்வளவுதான்!! 

நொச்சி மரத்திற்கு மஞ்சள்,  குங்குமம் ஆகியவற்றை பூசி குலதெய்வமாக கருதி ஆவாகனம் செய்ய வேண்டும். இந்த மரத்தின் அடியில் மண்பானை அல்லது பித்தளை செம்பில் நீர் நிரப்பி வைத்து விடுங்கள். இதன் பக்கத்திலேயே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினை வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை இட்டு பூக்களை சாற்றி வையுங்கள். முக்கியமாக நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் செய்து வையுங்கள். 

வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். மண் தட்டு அல்லது வாழை இலையில் நைவேத்தியமாக செய்த சர்க்கரைப் பொங்கலை படைக்க வேண்டும். தீபத்திலும் தூபத்திலும் குலதெய்வத்தை ஆராதித்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய குலதெய்வம் யார் என்பது தெரியாது என்று குழப்பத்தில் மன்றாடாமல் இருக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,''மனதிற்குள்ளே குலதெய்வமாகிய உம்மிடமே மன்றாடுகிறோம். எங்களுடைய கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாவற்றிலும் எங்களை காத்து வழிநடத்து எங்கள் குல தெய்வமே!'' என வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: ஆடி மாத ராசி பலன் 2024: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 3 ராசிகள் இவையே..

குலதெய்வ வழிபாட்டில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஒளிர விடுவதே ஏற்றது. மற்ற விளக்குகளை விடவும் மண் விளக்கே குல தெய்வத்திற்கு உகந்தது என சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் மீண்டும் மண்ணிற்கே திரும்ப சென்று விடுவதால் குலதெய்வத்திற்கு ஏற்றது என சொல்கிறார்கள். 

இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்து மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை நன்றாக பூசி நெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுங்கள். குலதெய்வம் யார் என்று தெரியாமல் இருப்பதும் குலதெய்வ வழிபாட்டை தவிர்ப்பதும் குடும்பத்திற்கு நல்லதல்ல. ஆகவே இந்த நொச்சி மர வழிபாட்டை செய்து உங்களுடைய குலத்தை தழைக்க வையுங்கள்.

click me!