இந்த 3 ராசிக்காரங்க திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போகவே கூடாதாம்!! மீறி போனால் அவ்வளவுதான்!! 

By Kalai Selvi  |  First Published Jul 6, 2024, 4:31 PM IST

Three Rasis Should Never Go To Tirupati : திருப்பதிக்கு சில ராசிக்காரர்கள் சென்று தரிசனம் செய்யக்கூடாது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன அது ஏன் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 


கஷ்டங்கள் தீர, மன நிம்மதி கிடைக்க, பொருளாதார உயர்வு பெற என திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மக்கள் படையெடுப்பார்கள். அங்கு சென்று தரிசனம் செய்த பின்னர் பலருக்கு வாழ்வில் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். 

உங்களுக்கு பணக்கஷ்டம் இருந்தால் தமிழ் மாதத்தில் வரும் முதலாவது திங்கள்கிழமை அன்று திருப்பதியில் தரிசனம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் அந்த ஆண்டு முடியும் முன்பாக நீங்கள் கோடிகளில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்குமாம். இப்படியும் சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்வது அவர்களுக்கு கெட்ட விளைவுகளை கொண்டு வரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

Tap to resize

Latest Videos

undefined

சிலர் திருப்பதியில் வழிபாடு செய்து வந்தால் அவர்களுடைய வீட்டில் துர்மரணம் நிகழ வாய்ப்புள்ளது கூறப்படுகிறது. சிலருக்கு விபத்து ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு  திருப்பதிக்கு சென்று விட்டு வந்த பின்னர் இது மாதிரி ஏதேனும் நிகழ்வு நடந்தால் அதன் பின்னர் நீங்கள் திருப்பதிக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  திருமலை திருப்பதி உட்பட ஐந்து கோயில் தரிசனம்.. ஐஆர்சிடிசி ஆன்மீக டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் சந்திர பகவானின் தாக்கம் அதிகமாக காணப்படும். இப்படி காணப்படுவதால் சிலருக்கு திருப்பதிக்கு சென்று வந்ததும் மனதில் நிம்மதியும், குடும்பத்தில் சமாதானமும் நிலவும். ஆனால் வேறு சிலருக்கும் வீட்டில் பிரச்சனைகளும் மனதில் கலக்கமும் ஏற்படும். உங்களுக்கு திருப்பதி சென்று வந்த பின்னர் இது மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? எப்படி முன்பதிவு செய்வது?

எந்தெந்த ராசியினர் திருப்பதி செல்லக் கூடாது? 

இந்து சாஸ்திரங்களின்படி 3 ராசிகளை சேர்ந்த நபர்கள் திருப்பதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அதை மீறி அவர்கள் திருப்பதியில் தரிசனம் செய்தால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே இருப்பார்கள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினர் திருப்பதியில் சென்று தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. வருடத்திற்கு ஒரு தடவை திருப்பதியில் தரிசனம் செய்தால் பெரிய பாதிப்பு இல்லை.  ஆனால் அடிக்கடி திருப்பதிக்கு சென்று வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார அளவில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த மூன்று ராசிகளை தவிர மற்ற ராசிகளை உடைய நபர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பதியில் சென்று தரிசனம் செய்யலாம். வாஸ்து பாத்திரங்களின்படி, பள்ளமான வடகிழக்கு பகுதியும், உயரமான அல்லது மேடான தெற்கு பகுதியும் கொண்டிருக்கும் இடங்கள் புகழ் பெற்று விளங்கும். திருப்பதியும் அத்தகைய வாஸ்து பண்புகளை கொண்டுள்ள இடம் தான். ஆகவே தான் திருப்பதியில் பிரபஞ்ச ஆற்றல் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினரை தவிர்த்து மற்ற ராசிக்காரர்கள் திருப்பதியில் தரிசனம் செய்து வந்தால் அவர்களுக்கு பிரபஞ்ச ஆற்றலினால் நன்மைகள் நடக்கும் என்பது இந்துக்களிடையே பரவலான நம்பிக்கையாக உள்ளது. 

திருப்பதிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் ஏழுமலையானை மனதிற்குள் வேண்டிக்கொண்டு, காணிக்கை உண்டியல்களில் காசு சேர்த்து வைக்கவேண்டும். அந்த தொகையில் பயணம் செய்வது இன்னும் நன்மை பயக்கும்.  பயணச் செலவு போக மீதமாகும் தொகையினை அங்குள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தலாம். குறிப்பாக திருப்பதிக்கு செல்ல முயற்சி செய்யும் சிலருக்கு தடங்கல்கள் ஏற்படுவது சகஜம்தான். மனம் தளர வேண்டாம். நாம் விரும்பினாலும் ஏழுமலையான் நமக்கு வாய்ப்பு அருளும் போது மட்டுமே நம்மால் அங்கு சென்று தரிசனம் செய்ய முடியும். அதனால் மனதில் நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள்.

click me!