Latest Videos

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருதா..? இந்த வாஸ்து கோளாறா தான் இருக்கும்.. உடனே சரி பண்ணுங்க! 

By Kalai SelviFirst Published Jun 29, 2024, 8:25 PM IST
Highlights

Vastu Tips For Happy Married Life  : திருமணமான தம்பதிகள் சண்டை சச்சரவுகளின்றி அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாஸ்துவின் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

திருமணம் என்பது மனிதர்களுக்கு கிடைத்த அற்புதமான பந்தம்.  இதில் ஆணும் பெண்ணும் உடலாலும் ஆன்மாவாலும் இணைகின்றனர். இந்த உறவை வெற்றிகரமாக அமைத்து கொள்ள நல்ல தாம்பத்தியம் இருக்க வேண்டும். சிலர் எவ்வளவு மெனக்கெட்டாலும் தோல்வியை தான் சந்திப்பர். அதற்கு வாஸ்து சரியாக இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவறான வாஸ்து திசைகள் திருமண உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இங்கு திருமண வாழ்க்கையை மேம்படுத்தும் சில வாஸ்து குறிப்புகளை காணலாம்.  

இதையும் படிங்க: நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!

திருமண வாழ்க்கையை மேம்படுத்தும் சில வாஸ்து குறிப்புகள்:

  1. தம்பதிகள் எப்போதும் வீட்டின் தென்மேற்கு திசையில் தான் உறங்க வேண்டும். அதுவே தம்பதிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். 
  2. பெட்ரூம் மஞ்சள், வெளிர் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களால் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உறவில் அற்புதங்களை செய்யும். உங்களுக்கிடையே அமைதியான, நேர்மறை சிந்தனையை தரும்.  
  3. எப்போதும் கணவனும் மனைவியும் ஒரே கட்டிலில் தான் உறங்க வேண்டும். தனித்தனியாக தூங்குவது மனக்கசப்புகளை  உருவாக்கலாம்.
  4. இரும்பு கட்டிலை பயன்படுத்துவதை விடவும், மரக் கட்டிலைப் பயன்படுத்துவது நல்லது. இதுவே உங்களுடைய உறவில் இருக்கும் எதிர்மறை சிந்தனைகளை குறைக்கும். உங்களுக்கும் நம்பிக்கையான எண்ணங்களை தரும். 
  5. சரியான நீள, அகலத்துடன் சதுர அல்லது செவ்வக படுக்கையை வாங்குங்கள். எப்போதும் படுக்கையறையில் புத்தம் புதிய பூக்களை வைத்து பழகுங்கள். இது நல்ல வாசனையை ஏற்படுத்தும். இதனால் மனநிலை நன்றாக இருக்கும்.
  6. தூங்கும்போது தலையை தெற்கு நோக்கியும், கால்களை வடக்கு நோக்கியும் வைத்து உறங்கி பழகுங்கள். இதுவே நல்லது. 
  7. படுக்கையறையில் கண்ணாடி வைத்தால் அது கெட்ட சக்திகளை ஈர்க்கும். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் வரும். அதனால் இரவில் கண்ணாடியை மூடுங்கள் அல்லது படுக்கையறையில் கண்ணாடியை வைக்கவேண்டாம்.
  8. தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் படுக்கையறையை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இபப்டி வைத்தால் திருமணத்தில் அடிக்கடி மோதல்கள் வரும்.  
  9. வடகிழக்கு திசையில் சமையலறையை வைக்க வேண்டாம். இப்படி அமைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றலின் ஓட்டம் குறையும். 
  10. படுக்கையறையில் முட்செடி அல்லது பொன்சாய் மரங்களை வைக்க வேண்டாம். மறந்தும் இருண்ட வண்ணங்களை பயன்படுத்த வேண்டாம். இது எதிர்மறையான விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தும்.
  11. உங்களுடைய படுக்கைக்கு அடியில் பொருள்களை சேமித்து வைக்க வேண்டாம். இது உங்களுடைய உறவுக்கு தீங்கு விளைவிக்கும்.
  12. எல்லாவற்றையும் விட முக்கியமாக தென்மேற்கு திசையில் நிலத்தடி நீருக்கான தொட்டியை வைக்கவேண்டாம். இதனால் கணவன், மனைவியின் எண்ணங்கள் பாதிக்கப்படும்.   
  13. மேற்கண்ட விஷயங்களை பின்பற்றினால் சந்தோஷமான  திருமண வாழ்க்கை அமையும்.

இதையும் படிங்க:  Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

click me!