Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!
வாஸ்து சாஸ்திரம் படி, வீட்டில் வாஸ்து தோஷம் குறைபாடு நீங்கி, பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்க, சில வாஸ்து குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

good luck for your house
நமக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்று பலரது கனவு. இதற்காக அவர்கள் ஒரு வீட்டை கட்டி விடுகிறார்கள் (அ) வாங்கி விடுகிறார்கள். ஆனால், இப்படி பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் (அ) தேடி தேடி வாங்கிய வீட்டில் வாஸ்து பார்க்க தவறியதால், வாஸ்து தோஷம் ஏற்பட்டு, அந்த வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் இல்லாமல் தவிக்கிறார்கள்.
good luck for your house
வாஸ்து சாஸ்திரம் படி, வீட்டில் வாஸ்து தோஷம் குறைபாடு நீங்கி, பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்க, சில வாஸ்து குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். இவற்றை முறையாக செய்தால் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். இப்போது அது என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
good luck for your house
வீட்டின் நுழைவாயில்: வீட்டின் நுழைவாயில் என்பது பாசிட்டிவ் ஆற்றலை ஈர்க்கக்கூடியது. அது எப்போதும் அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வீட்டின் முன் பகுதி எப்போதும் வெளிச்சமாக இருக்க வேண்டும். அதுபோல வீட்டின் பிரதான கதவு வடக்கு (அ) கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும். செருப்புகளை ஒருபோதும் வீட்டின் வாசல் முன் கழற்றக்கூடாது. இது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
good luck for your house
சூரிய ஒளி: உங்கள் வீட்டிற்கு சூரிய ஒளி எவ்வித தடையும் இல்லாமல் எல்லா இடத்திலும் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வீட்டிற்கு வரும் சூரிய ஒளி எதிர்மறை ஆற்றல் மற்றும் கிருமிகளை அழிக்க கூடியதாக கருதப்படுகிறது.
good luck for your house
மீன் தொட்டி: நாம் ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது. இதனால் பல விதமான நோய்கள் நம்மை தாக்குகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், பல வண்ண மீன்களை வீட்டில் வளர்த்தால் அவை வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அது மட்டுமின்றி, இவை வீட்டிற்கு செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் பெருக்கும். வீட்டில் மீன் தொட்டி வைக்க சரியான திசை எதுவென்றால், வடகிழக்கு அ) தென்கிழக்கு திசையாகும்.
இதையும் படிங்க: தீராத பண கஷ்டம் தீர வேண்டுமா..? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!
good luck for your house
முள் செடிகள்: வீட்டில் முள் செடிகள் வளர்க்கக்கூடாது இவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். அதுபோல, வீட்டு அலங்கரிப்பதற்கு பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்தக்கூடாது. இவை வீட்டில் கெட்ட அதிர்வலைகளை உண்டாக்கும். காய்ந்த அல்லது பட்டுப்போன செடி மரம் வீட்டில் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள். இவை நெகட்டிவ் எனர்ஜியை வீட்டிற்கு கொண்டு வரும்.
இதையும் படிங்க: எந்தக் கிழமையில் எந்த நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?
good luck for your house
பிரமிடு கற்கள்: உங்கள் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி இருந்தால் கூழாங்கற்களை கொண்டு பிரமிடு போல் செய்யுங்கள். இது வீட்டை அழகு படுத்துவது மட்டுமின்றி எதிர்மறை ஆற்றலையும் துரத்தும். மேலும் இந்த கல்லை உங்கள் வீட்டின் பூஜையறை அல்லது வீட்டின் மையப்பகுதியில் வைக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D