மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி திருவிழா; சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு!

By Rsiva kumar  |  First Published Mar 26, 2023, 1:20 PM IST

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்த வெண்ணைத்தாழி திருவிழாவில் சுவாமி மீது வெண்ணை வீசி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
 


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முக்கியத்துவம் வந்த வைணவ கோயில்களில் ஒன்று ராஜகோபால சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் பங்குனி திருவிழாவின் 18 நாள் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கடந்த 11-ம் தேதி அன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று முதல் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலக வாய் சுகாதார தினம்: மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் பங்குனி திருவிழாவில் வெண்ணைத்தாழி திருவிழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி ராஜகோபால சுவாமி வெண்ணெய்  திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெண்ணை குடத்திலிருந்து வெண்ணையை எடுத்து உண்ணும் அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் ராஜகோபால சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு செய்தனர்.

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் தலைமறைவு!

தொடர்ந்து கோயிலின் நான்கு வீதிகளையும் மேல ராஜா வீதி பந்தலடி வழியாக வெண்ணை தாலி மண்டபம் வந்தடைந்த சுவாமி மீது சாலைகளின் இரு மருங்கிலும்  நின்ற பக்தர்கள், சுவாமி மீது வெண்ணெயை வீசி கோபாலா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டபடி  வழிபாடு செய்தனர். தொடர்ந்து இன்று இரவு தங்க வெட்டும் குதிரை வாகனம் நடைபெற உள்ளது. அதில், ராஜகோபால சுவாமி ராஜா அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்ல உள்ளார்.

 புதுச்சேரியில் திருநங்கைக்கு போலீசார் பாலியல் தொல்லை; டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்

காலையில் நடைபெறும் வெண்ணைத் தாழி  தொடங்கி இரவு வெட்டும் குதிரை விதி உலா நிகழ்ச்சி வரை நடைபெறும் திருவிழாவை கண்டுகளிக்க மன்னார்குடியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர் இதனால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கணவரை கொலை செய்ய நண்பர் மூலம் முயற்சி செய்த சுந்தரி சீரியலின் துணை நடிகை கைது!

 

click me!