இந்த நட்சதிரத்தன்று கடன் வாங்கினால் வட்டிக்கு மேல் வட்டி குட்டி போடும்!

By Asianet Tamil  |  First Published Mar 25, 2023, 7:13 PM IST

மீள முடியாத கடனில் உள்ளவர்கள் அதனை சமாளிக்க என்ன செய்வது? எப்போது கடன் வாங்கக் கூடாது போன்ற விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்


என்ன தான் நாம் ஓடி ஓடி உழைத்து சம்பாதித்தாலும் மத கடைசியில் கையில் பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கி தான் நமது வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். வாங்கும் கடனை ஒரு சிலர் சரியாக திருப்பி செலுத்தி விடுகிறார்கள். ஒரு சிலருக்கு மேற்கொண்டு கடன் வாங்கும் நிலைமை உருவாகிறது. இது எதனால் என்று பார்த்தால் கடன் வாங்கும் நேரம், காலம், சூழல் போன்றவையால் வாங்கும் கடனை அடைக்க முடியாமல் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நிலை உருவாகிறது. தவிர இந்த கடன் மென்மேலும் பெருகி தீர்க்க முடியாத கடனாக ஒரு கட்டத்தில் வந்து நிற்கும்.

கடன் வாங்குபவர்களிடம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணம் இருக்குமே தவிர கடனை திருப்பும் அளவிற்கு பணம் இல்லாத காரணத்தால் காலம் முழுவதும் வட்டியை கட்டும் சூழலாக மாறும். இப்படி மீள முடியாத கடனில் உள்ளவர்கள் அதனை சமாளிக்க என்ன செய்வது? எப்போது கடன் வாங்கக் கூடாது போன்ற விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அஸ்தம் நட்சத்திரதன்று கடன் வாங்கக் கூடாது:

பல வருடங்களாக தொடர்ந்து வட்டிக் கட்டிக்க கொண்டே இருப்பவர்கள் அவர்கள் கடன் வாங்கிய நாளில் அஸ்தம் நட்சித்திரமாக இருந்திருக்கலாம். ஏன்னெனில் அஸ்தம் நட்சத்திரம் அன்று வாங்கும் கடன்கள் தீர்க்க முடியாத கடன் சுமையை உருவாக்கி வைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆகையால் கடன் வாங்கும் முன்பு அன்று என்ன நட்சத்திரம் உள்ளது என்று காலண்டர் மூலம் தெரிந்து கொண்டு பின் கடன் வாங்குங்கள். தீடீர் மருத்துவ செலவு, தீடீர் பயண செலவு போன்றவைக்கு கடன் வாங்கும் போது இதனை பார்க்க வேண்டியதில்லை.
 

Tap to resize

Latest Videos

48 நாட்களில் கேட்ட வரத்தை தரும் சக்தி வாய்ந்த சூரிய, சந்திர வழிபாடு!

ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கி படதிற்கு போவது, கடன் வாங்கி ஹோட்டலுக்கு போவது, கடன் வாங்கி உடை வாங்குவது போன்றவற்றை செய்வார்கள். அவர்கள் தேவையற்ற கடன்களை வாங்கும் போது இந்த நட்சத்திரம் அன்று கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். தவிர லோன் போடுவது, நகை வைத்து பணம் பெறுவது, வங்கிகளில் நகை வைத்து வட்டிக்கு கடன் வாங்குவது இப்படி கடன் வாங்குபவர்கள் இந்த நட்சத்திரத்தன்று கடன் வாங்குவதை ஒத்தி வையுங்கள்.

சரி ஏதோ ஒரு அவசரத்திற்காக பணமாக கடன் வாங்கி அதனை தற்போது மீண்டும் கட்ட முடியாமல் வெறும் வட்டியை மட்டும் கட்டி வருகிறோம். இந்த பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என்று நினைப்பவர்கள் இந்த சக்தி வாய்ந்த எளிய பரிகாரத்தை செய்து ஒரு தீர்வை பெறுங்கள்.

16 செவ்வாய் கிழமையன்று:

கடன் பிரச்சனையே தீர்க்க இந்த பரிகாரத்தை 16 செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய ஒரு சிறிய கிண்ணத்தில் நாட்டு சர்க்கரை, சிறிது பச்சரிசி மாவு, சிட்டிகை ஏலக்காய்த் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு கோவிலுக்கு சென்று விநாயகர் சிலைக்கு கீழ் வைத்து நிவேதனம் செய்து விட்டு பின் அதனை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள எறும்பு புற்றில் அல்லது எறும்புகளுக்கு தானமாக உங்கள் கையால் போட வேண்டும்.

இதனை எறும்புகளுக்கு தானமாக வழங்கும் போது மனதை ஒரு ஒருமுகப்படுத்தி விநாயகர் மற்றும் மகாலட்சுமி தேவியை நினைத்து மனதால் வழிபட்டு கடன் பிரச்சனையிலிருந்து விரைவில் விடு பட வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து விட்டு இந்த தானத்தை செய்ய வேண்டும். இப்படி 16 வாரங்கள் தொடர்ந்து இதனை செய்து வரவே உங்கள் கடன் தொகையாக சிறிது சிறிதாக குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

நெடுங்காலமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த கடனை செலுத்தி விடுவீர்கள். சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறுங்கள்!

click me!