குலதெய்வம் கோயிலுக்கு இந்த 1 தானம் செய்தால்... எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீருமாம்..!

By Ma Riya  |  First Published Mar 24, 2023, 7:18 PM IST

குலதெய்வம் கோயிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் விலகும். 


ஒவ்வொரு மாதமும் குலதெய்வம் கோயிலுக்கு நேரடியாக சென்று வழிபாடு செய்வதால் நம் குடும்பத்திற்கு நன்மைகள் பெருகும். எல்லோராலும் மாதம்தோறும் குலதெய்வம் கோயிலுக்கு போக முடியாது என்ற சூழலில் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை என 1 ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 தடவை குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். 

குலதெய்வ வழிபாட்டை எப்போதும் செய்து வர வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்தால் நாம் செய்யும் பரிகாரங்கள் முழுமை பெறும். இஷ்ட தெய்வங்களும் நமக்கு நன்மைகளை வழங்குவார்கள்.

Tap to resize

Latest Videos

குலதெய்வக் கோயிலுக்கு செல்லும்போது அங்கு எண்ணெய், திரி ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம். இது தவிர சில பரிகாரத்தை, வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று நாம் செய்வதால் நல்ல நன்மைகள் கிடைக்கும். நம்முடைய கவலைகள் தீர, பணக்கஷ்டம் தீர குலதெய்வம்தான் ஆதரவு கொடுக்கும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். குல தெய்வ கோயிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் செல்லும்போது, எடைக்கு எடை பச்சரிசியை தானமாக வழங்குங்கள். 

இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை இந்த காரியங்கள் செய்தால்.. பணக் கஷ்டம் தீரும், மீறினால் மீள முடியாத கடன் பிரச்சினை வரும்...!

பச்சரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து குல தெய்வ கோயிலில் இருக்கும் எறும்புக்கு கொடுத்தால் கடன் பிரச்சனை நீங்கும். வீட்டிற்கும் பணவு வரவு ஏற்படும். நீங்கள் வசிக்கும் ஊரில் இருக்கும் எல்லைச்சாமிக்கு பட்டு சாற்றி பொங்கல் படையல் போட்டால், கடன் தொந்தரவில் இருந்து மீண்டு வரலாம்.  

இதையும் படிங்க: கோயில்களில் கொடுக்கும் கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள்..!

click me!