Varalakshmi Vratham 2024 : இந்த 2024 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது? லட்சுமி தேவியை வழிபடுவதற்கு உகந்த நேரம் என்ன? வழிபடும் முறை ஆகியவற்றை குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
வரலட்சுமி விரதம் என்பது செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவியின் அவதாரங்களில் ஒன்றான தேவியை வழிப்பட வேண்டிய முக்கிய நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவியை முழு மனதுடன் வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம்:
undefined
வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பணிபுரிக்கப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதம் தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் முக்கியமாக திருமணமான பெண்கள் மட்டுமே செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பொருள் செல்வம், செழிப்பு போன்ற நாம் நினைத்த அனைத்து காரியங்களும் நடக்கும் என்பது நம்பிக்கை. இது பெரும்பாலும் திருமணமான பெண்களால் கணவன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?
வரலட்சுமி விரதம்:
பொதுவாகவே இந்த வரலட்சுமி விரதம் பெண்களால் மட்டுமே செய்யப்படுகின்றது. வரலட்சுமி விரதம் அன்று வரலட்சுமியின் படம் அல்லது கலசம் வைத்து வழிபடலாம். வரலட்சுமி விரதம் மூன்று நாள் கடைபிடிக்கப்படும். அதாவது, முதல் நாள் வியாழக்கிழமை அன்று வரலட்சுமி வீட்டிற்குள் அழைப்பர். பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இறுதியாக சனிக்கிழமை அன்று புனர்பூஜை செய்யப்படும். ஒருவேளை இந்த மூன்று நாட்களும் வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள், கண்டிப்பாக வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Varalakshmi: வரலட்சுமி விரதம் பூஜையில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள், கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
2024 வரலட்சுமி விரதம்:
இந்த 2024 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதாவது, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி ஆகும். இந்நாளில் பெருமாளுக்கு உரிய ஏசுதாசி மற்றும் துவாதசி செடிகள் சேர்ந்து வரும் நாளாகும். அதுமட்டுமின்றி, இந்நாளில் தான் பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இணைந்து வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரலட்சுமி விரதம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்குரிய ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்:
வரலட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
புனர்பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
வரலட்சுமி விரத வழிபாட்டு முறை:
வரலட்சுமி விரத நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி புதிய ஆடை அணிந்து பூஜை அறையில் ஒரு வாழை இலை விரித்து அதில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தாமரை மலர்கள் அல்லது மல்லிகை பூ வைத்து, பின் அர்ச்சனைகுரிய துளசி, வில்வம் போன்றவை வைக்கவும். ஒருவேளை அப்படி செய்ய முடியாதவர்கள் சாதாரண மலர்கள் குங்குமம் என எந்த பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்ய முடிகிறதோ அதை கொண்டு லட்சுமி தேவி கூரிய நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வரலட்சுமி காலை 10:20 மணிக்குள் இதை செய்து முடித்திருக்க வேண்டும். பின் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து பூஜை நிறைவு செய்யுங்கள். தாலி சரடு மாற்றிக் கொள்பவர்களும் இந்த நேரத்திற்குள் மாற்றிக் கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D