Ashada : தமிழ் நாள்கட்டியின்படி வருடத்தின் 4ம் மாதத்தை தான் ஆஷாடம் (ஆடி) என்று அழைக்கப்பார்கள். இது குறித்து பல விஷயங்களை இப்பொது பார்க்கலாம்.
இந்து கலாச்சாரத்தின்படியும், தமிழ் நாள்காட்டியின்படியும் வருடத்தின் நான்காம் மாதம் "ஆஷாடம்" என்ற மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது ஆடி மாசம் வருகின்ற அதே நாள்களில் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் முடிந்து பருவமழை காலம் துவங்குகின்ற நேரத்தை ஆஷாடம் என்று அழைக்கிறார்கள்.
இந்த ஆஷாட மாதத்தில் பல அம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறும், உண்மையில் புனித ஸ்தலங்களை சென்று தரிசிக்க மிக மிக உகந்த நேரமாக இந்த ஆஷாடம் மாதம் உள்ளது. இந்த மாதத்தில் இறைவனிடம் நான் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெறும் என்கின்ற நம்பிக்கையும் உள்ளது.
திருத்தலங்களை சென்று தரிசிக்க இது உகந்த நாளாக இருந்தாலும், இதை துரதிஷ்டமான ஒரு மாதமாகவே கருதுகிறார்கள். ஆகையினால் தான் இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா, திருமணம் போன்ற பிற சுப காரியங்களை யாரும் செய்வதில்லை. அதே நேரம் நாம் வணங்குகின்ற தெய்வங்களுக்கு உப்பு, மண்பாண்டங்கள், அரிசி, கோதுமை, வெள்ளம் மற்றும் எள் போன்றவற்றை விஷயங்களை படைத்து வணங்கினால் பெரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதேபோல ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும் நிலையில், இந்த ஆண்டு ஆஷாட ராத்திரி கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி காலை 5.28 மணிக்கு துவங்கி, ஜூலை மாதம் 15ம் தேதி 10.06 வரை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Today Rasi Palan 11th August 2024 : இன்றைய ராசிபலன்கள்.. இன்று 12 ராசிக்கும் நாள் எப்படி?