பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்ட வாராஹி தேவியை யாரெல்லாம் வழிபடலாம் என்பதை குறித்து இங்கு காணலாம்.
வாராஹி என்பவள் சைவம், பிராமணம், வைணவம் சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றவர்கள் வழிபடும் தெய்வமாக விளங்க கூடியவள். வாராஹியை வழிபட்டால் நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த பணம் இனி திரும்பவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட அந்த நிலைமையை மாறும் என்பது பலரும் அனுபவித்த ஒரு உண்மை ஆகும்.
வாராஹி:
வாராஹியை தேவி சப்த கன்னிகளில் ஒருவர் ஆவார். இவர் விஷ்ணுவின் பன்றி அவதாரத்தின் உருவப்படுத்தப்பட்ட பெண் ஆற்றல் ஆகும். இவர் தெய்வீக குணம் விலங்கின் ஆற்றலும் கொண்டவராக விளங்குகிறார் மூர்க்க குணம் உடையவளாக இருப்பதால் இவரை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இதனால் இவரை மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சொல்லுவது உண்டு. பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்ட வாராஹி தீய சக்திகள், கடன்கள் போன்ற துயரங்களை நீக்குகிறார். வாராஹிக்கு காசி மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமே தனி சன்னதி உள்ளது.
undefined
முதல் பூஜை:
வாராஹி, பராசக்தியின் போர் தளபதியாக இருப்பதால் இவரை வழிபடுபவர்களுக்கு உலகெங்கிலும் எதிரிகளை இருக்க மாட்டார்கள் என்பது ஐதீகம். இவள் ராஜராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக விளங்குகிறார். மேலும் கோவில் விழாக்கள் மற்றும் ஊற்சவங்கள் நடந்தால் விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் வாராஹிக்கு முதல் பூஜை நடத்தப்படும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வாராஹியை வழிபடும் முறை:
அந்தி வேலைக்குப் பிறகு வாராஹியை வழிபடுவது சிறந்தது. வாராஹிக்கு இரவு பூஜை பன்மடங்கு பலன்களை தருகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் அவள் அழைக்கப்படுகிறாள். தேவிக்கு தீபத்தை வடக்கு நோக்கி ஏற்றி, மணம் வீசும் தூபியை எரிக்க வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, மாதுளைப் பழம், புளி சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை வாராஹி தேவிக்கு உகந்த பிரசாதமாகும். வாராஹி மந்திரங்களை 3, 21 அல்லது 108 முறை உச்சரிக்கவும். மந்திரத்தை எண்ணி வைக்க ஜெபமாலையை பயன்படுத்தவும். பூஜை முடிந்ததும் தீப ஆராதனை செய்யவும். 48 நாட்கள் வாராஹியை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது பொழியும் மற்றும் உங்களது ஆசைகள் நிறைவேறும்.
வழிபட வேண்டியவர்கள்:
கிருத்திக்கை, பூரணம், மூலம், ரேவதி ஆகியநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வழிப்பட வேண்டும். அதுபோல மகரம், கும்பம் ராசிக்காரர்களும் வழிபடலாம். அவ்வாறு வழிபட்டால் அவர்களுக்கு
கஷ்டங்கள் ஏதும் வராது. மேலும் சனிஆதிக்கம் உள்ளவர்கள் மற்றும் சனி திசை நடப்பவர்களுக்கும் வாராஹியை வழிப்படலாம்.
வழிபடும் நாள்:
நீங்கள் சனியின் தொல்லையை அனுபவிப்பவர்களாக இருந்தால் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வாராஹியை வழிபடவும். அவ்வாறு செய்தால் சனியால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். இது தவிர பஞ்சமி, பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.