கடன் பிரச்சனை தீர பஞ்ச கவ்ய தீபம் எப்போது? எப்படி? ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் ஒவ்வொருவரும் ஓயாமல் உழைப்பது எந்த பண பிரச்சனைகளும் இன்றி நிம்மதியாக வாழ்வதற்காக தான். ஆனால் வெறும் உழைப்பு மட்டும் நம்முடைய வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வருவதில்லை; இறை வழிபாடும் நல்ல காரியங்களை நம்மிடம் கொண்டு வரும் சக்தி படைத்தது.
சிலர் வீட்டு பிரச்சினைகள் தீர நிம்மதி நிலவ ஹோமங்கள் செய்வார்கள். ஆனால் எல்லோராலும் ஹோமங்கள் செய்ய முடிவதில்லை அப்படியான ஏழை, எளிய மக்களுக்கு பஞ்ச கவ்ய தீபம் தான் வரப்பிரசாதம். சிலருக்கு ஆண்டுகணக்கில் தீராத கடன் பிரச்சினை இருக்கும். சிலருக்கு அண்மை காலமாக மட்டுமே கடன் தொந்தரவு காணப்படும் இந்த பிரச்சனைகளை இந்த ஒரு தீப வழிபாட்டினால் சரி செய்யலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் பஞ்ச கவ்ய தீபம் நம்முடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் சக்தி கொண்டது.
undefined
இந்த தீபத்தை வெள்ளி, செவ்வாய் ஆகிய கிழமைகளில் ஏற்றலாம். காலை அல்லது மாலை ஆகிய வேளைகளில் தீபமேற்றி வழிபாடு செய்யலாம். அதிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் ஆக இருந்தால் இன்னும் சிறப்பு. மாலையில் பஞ்ச கவ்ய விளக்கேற்றுபவர்கள் 7 மணிக்குள் ஏற்றி விட வேண்டும். வழிபாட்டின் போது இந்த பஞ்ச கவ்ய விளக்கு ஒன்று அல்லது ஐந்து விளக்குகள் வைத்து தீபம் ஏற்றி கொள்ளலாம்.
வீட்டில் பணம் சேர!! செல்வம் அருளும் மகாலட்சுமியின் ஆசியை பெற வாஸ்துபடி வளர்க்க வேண்டிய செடிகள்!!
இந்த விளக்கை ஏற்றும் போது அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் அதன் மீது கோலமிட்டு விளக்கு வைக்க வேண்டும். பின்னர் அதை சுற்றி பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இந்த பஞ்ச கவ்ய விளக்கில் திரி விட்டு நெய் தீபத்தை ஏற்றுங்கள். பின்னர் தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். ஏதேனும் ஒரு சுவாமி அல்லது அம்மாள் திரு உருவ படத்தை விளக்கின் முன்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த தீபம் எரிந்து முடிந்த பின்னர் அப்படியே விளக்கும் சேர்ந்து எரியும். ஆகவே இந்த தீபம் ஏற்றும் போது பக்கத்தில் வேறு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூஜையறையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்த பிறகு தீபத்தை அப்படியே வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டுவது காட்டுங்கள். இதன் மூலம் வீட்டில் உள்ள எல்லா தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றலும் மறையும். இந்த தீபம் எரிந்து முடிந்த பின் அந்த சாம்பலை விபூதியாக நெற்றியில் பூசலாம். இந்த சக்தி வாய்ந்த தீபம் ஏற்றுவதனால் கடன் தொல்லை தீரும்.
இந்த 4 ராசிகளுக்கு ஜூன் மாதம் பொற்காலம்.. பணம் கொட்ட போகுது!! யார் அந்த அதிர்ஷ்டக்காரர்கள்??