Today Rasipalan 29th May 2023: பயணத்தை தவிர்க்க வேண்டியது யார்..? கார் வாங்கணும்னா உடனே வாங்குங்க

By karthikeyan V  |  First Published May 29, 2023, 5:30 AM IST

மே 29ம் தேதிக்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்ப்போம். 


மேஷம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள் என்பதால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள்.

Tap to resize

Latest Videos

ரிஷபம்:

நெருங்கிய உறவினரிடமிருந்து வரும் நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடு செய்ய ஏற்ற சமயம் இது. ஈகோவை தவிர்க்கவும். 

மிதுனம்:

தந்தையின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை ஏற்று செயல்படவும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு அகலும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து கடுமையாக உழைக்கவும்.

கடகம்:

அக்கம்பக்கத்தினருடன் சண்டை போடவேண்டாம். தொழில் ரீதியான பயணங்களை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர புரிதலால் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

சிம்மம்:

உங்கள் தனிப்பட்ட வேலையை முடிக்க நிறைய நேரம் செலவிடுவீர்கள். சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் தொடர்பான வேலை வெற்றிகரமாக முடியும். தொழிலில் சீரியஸாக இருக்கவும். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்:

எந்த வேலையிலும் வெற்றி கிடைக்க கடினமாக உழைத்தாக வேண்டும். கார் வாங்குவதென்றால் உடனே வாங்கவும். தேவையில்லாத செலவுகளை குறைக்கவும்.

விருச்சிகம்:

எந்த பிரச்னையும் பேச்சுவார்த்தையின் மூலம் சரியாகும். குழந்தைகளிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். பட்ஜெட்டை கருத்தில்கொண்டு செலவு செய்யவும்.

தனுசு:

இன்று கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஈகோ மற்றும் கோபத்தை தவிர்க்கவும். குடும்ப பிரச்னையில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள்.

மகரம்:

உங்கள் திறமைக்கேற்ப வேலை பார்த்தால் வெற்றி கிடைக்கும். சரியான புரிதலுடன் முடிவுகளை எடுக்கவும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.

கும்பம்:

இன்று நற்செய்தி எங்கிருந்தாவது கிடைக்கும். நிதானமாகவும் அமைதியாகவும் முடிவெடுக்கவும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.

மீனம்:

தேங்கிக்கிடந்த வேலை இன்று திடீரென நடந்து முடியும். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். சகோதரர்களுடன் நல்லுறவை பேணவும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

click me!