மே 28ம் தேதிக்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்ப்போம்.
மேஷம்:
இன்றைய தினம் பிசியாக இருப்பீர்கள். முதலீடுகளை தொடங்க இதுவே சரியான நேரம். குழந்தைகளின் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
ரிஷபம்:
சுயநலமற்ற உங்களது சமூக சேவை மனதிற்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அளிக்கும். நண்பர்களுடன் நேரத்தை வீணடிக்காதீர்கள். இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவேண்டாம்.
மிதுனம்:
எந்த திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். நெருங்கிய உறவினருடன் சிறிய மோதல் ஏற்படலாம்.
கடகம்:
உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். முக்கியமான விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.
சிம்மம்:
குடும்ப பிரச்னையை தீர்ப்பீர்கள். நெருங்கிய உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் எப்போதும் போல நடக்கும். குடும்பச்சூழல் இனிமையாக இருக்கும்.
கன்னி:
வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். முக்கியமான பயணங்களை தவிர்க்கவும். கோபம் மற்றும் ஈகோவிற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
துலாம்:
தவறான வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அது உங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள். செலவுகளை குறைக்கவும்.
விருச்சிகம்:
குழந்தைகளின் நடத்தைகள் மகிழ்ச்சியளிக்கும். உறவினர்களுடன் தொடர்பிலேயே இருங்கள். முக்கியமான முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும்.
தனுசு:
அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய நேரம். வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
மகரம்:
தேங்கிக்கிடந்த வேலை திடீரென நடந்து முடியும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். தேவையில்லாத கவலைகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கும்பம்:
சரியான நேரத்தில் சரியான முடிவெடுங்கள். குடும்பத்தில் உள்ள நெகட்டிவான விஷயங்களை நினைக்காமல் தவிர்த்துவிடுங்கள்.
மீனம்:
முக்கியமான நற்செய்தி இன்று கிடைக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் மாதிரியான விஷயங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான முடிவெடுக்கும் முன் அனுபவஸ்தருடன் ஆலோசனை செய்யுங்கள்.