ஞாயிற்றுக்கிழமை இந்த திசையில் பயணம் செய்யக் கூடாது.. மீறி போனால் என்ன நடக்கும் தெரியுமா?

By Ma Riya  |  First Published Feb 4, 2023, 4:12 PM IST

ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யக்கூடாதவைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.  


ஞாயிற்றுக்கிழமை உழைக்கும் மக்களின் விருப்பமான நாள். அன்றுதான் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஆன்மாவைப் புதுப்பித்து, வரவிருக்கும் வாரத்திற்கு வலிமையை மீட்டெடுக்கும் நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளது. 

இந்து மதத்தில் ஞாயிற்றுக்கிழமை சூரிய நாராயணனின் நாளாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணுவுக்கும் ஏற்றநாள். இந்த நாளில் சூரிய கடவுளுவுக்காக சில விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரங்களின்படி, சூரிய பகவான் தான் கிரகங்களின் ராஜா என அழைக்கப்படுகிறார். அவரது அருளால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். 

Tap to resize

Latest Videos

சூரியபகவான் அனுக்கிரகம் இருந்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருப்பாரானால், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், புகழ் ஆகியவை உண்டாகும். 

ஞாயிற்றுக்கிழமைகளில் சில விசேஷ செயல்களை நாம் செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாதவைகள் என சில விஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை செய்தால் வாழ்வில் நஷ்டம் ஏற்படும். 

செய்யக்கூடாதவைகள்

  • ஜோதிட சாஸ்திரப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் உப்பு உண்ணக்கூடாது. இந்த நாளில் சாப்பிடுவதைக் கூட சூரிய அஸ்தமனத்திற்கு முன் சாப்பிட வேண்டுமாம். ஞாயிற்றுக்கிழமை அன்று உப்பு உண்பது ஆரோக்கியத்தில் மோசமான சில விளைவை ஏற்படுத்தும், அது ஒரு நபரின் ஒவ்வொரு வேலைக்கும் தடையாக இருக்கும் என நம்பப்படுகிறது. 
  • ஞாயிற்றுக்கிழமை அன்று மறந்தும் மேற்கு, வடமேற்கு திசையில் பயணம் செய்யக் கூடாது. அத்தியாவசியமான காரணங்களால் இந்த திசைகளில் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய வேண்டியிருந்தால், ஓட்ஸ், நெய் அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். 
  • தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் சூரிய பகவான் தொடர்புடைய பொருட்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்கவே கூடாது. இதனால் ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாகும். 
  • ஞாயிற்றுக்கிழமைகளில் உடுத்தும் ஆடைகளில் நிறம் ரொம்ப முக்கியம். நீலம், கருப்பு, பழுப்பு, கருப்பு ஆகியவை ஞாயிறு அன்று அணியக் கூடாத நிறங்கள். இவை அனைத்தும் சனியுடன் தொடர்புடையவை. சூரியனுக்கு மகனே ஆனாலும் சனிக்கும் சூர்யாவுக்கும் பகை இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் ஞாயிறன்று இந்த நிறங்களை அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டாம். அவை அணிந்தால் சூரியனின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். 
  • ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமுடியை வெட்ட செல்லக் கூடாது. அப்படி முடி வெட்டினால் சூரியனை பலவீனப்படுத்துகிறது என சாஸ்திரம் சொல்கிறது. 
  • ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மது போன்ற சனி தொடர்பான பொருட்களை உண்ணக்கூடாது. இதை செய்தால் ஜாதகத்தில் சூரியன், சனி ஆகிய கிரகங்களின் நிலையும் கெடுகிறது. 
  • இரத்த அழுத்தத்தை சீராக்க பூண்டு நல்லது எனக் கருதப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது இறந்தவர்களின் வியர்வையை குறிக்கிறதாக கூறப்படுகிறது. அதை போலவே வெங்காயம் பயனுள்ளதாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதை உண்பது அசுபமாக கருதப்படுகிறது. இந்த விஷயங்களை எல்லாம் ஞாயிறு அன்று முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். சூரியபகவானின் அனுகிரகம் பெறுங்கள். 

இதையும் படிங்க: கனவுவில் பாம்பு வருதா? செல்வம் கொட்ட போகுது! சிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு

இதையும் படிங்க: சனிக்கிழமை இந்த விஷயங்களை நேரில் பார்த்தால் செம்ம அதிர்ஷ்டம்.. சனி பகவான் அருளை எப்படி பொழிவார் தெரியுமா?

click me!