வாஸ்து தோஷம் ஏற்படாமல் வீடு கட்டுவது எப்படி?

By Dinesh TG  |  First Published Nov 24, 2022, 6:44 PM IST

வாஸ்து நிபுணருடன் கலந்தாலோசித்த பின்னரே பிளாட்கள் மற்றும் குடியிருப்புகள் திட்டமிடப்படுகின்றன. நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வாஸ்து படி வீடு கட்டும் நபர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் அவர்களுக்கு புதிய வீட்டில் நல்வாழ்க்கை இனிதே தொடங்குகிறது.


வீட்டுக்கு வாஸ்து மிகவும் அவசியமான சாஸ்திரமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது விஞ்ஞானத்துடனும் தொடர்புப்படுத்தி பார்க்கப்படுகிறது. அதனால் தான் வீடு கட்டும் போது தளவமைப்புகள், திசைகள் உள்ளிட்டவற்றை வாஸ்து பார்த்து கட்டுவார்கள். வெறும் வீடு கட்டுவதற்கு மட்டுமின்றி மனித செயல்பாடு சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. வாஸ்து நிபுணருடன் கலந்தாலோசித்த பின்னரே பிளாட்கள் மற்றும் குடியிருப்புகள் திட்டமிடப்படுகின்றன. நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வாஸ்து படி வீடு கட்டும் நபர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் அவர்களுக்கு புதிய வீட்டில் நல்வாழ்க்கை இனிதே தொடங்குகிறது.

நுழைவுவாயிலில் வாஸ்து

Tap to resize

Latest Videos

பொதுவாக சூரியன் உதிக்கும் கிழக்கும் திசை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதனால் புதியதாக வீடு கட்டுவோர், தங்களுடைய வீட்டின் நுழைவுவாயிலை கிழக்கு நோக்கி வைக்க விரும்புபவார்கள். அதேசமயத்தில் வடக்கு திசையை அடைத்து வீடு கட்டக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசை செல்வத்தின் வரவாக குறிப்பிடப்படுகிறது. வீட்டுக்காக அமைக்கப்படும் சாய்வு தளம் தெற்கிலிருந்து வடக்கே அல்லடு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய திசையில் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அலங்காரத்துக்கு கற்றாழை செடிகள் வைக்கக்கூடாது.

படுக்கை அறையில் வாஸ்து

வீட்டின் படுக்கை அறை எப்போதும் மேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். தூங்கும் திசை எப்போது தெற்கே இருக்க வேண்டும். நீங்கள் தலை வைத்து படுக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக தனியே அறை ஒதுக்குவது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கான அறை வீட்டின் வடமேற்கு திசையில் கட்டப்பட வேண்டுமாம். சுவரில் மரச்சாமான்களை வைக்கக்கூடாது. இது வீட்டுக்குள் வரும் நேர்மறையான ஆற்றலை நிறுத்திவிடுகிறது. மிகவும் உரத்த நிறங்கள் குழந்தைகள் அறைக்கு பூசக்கூடாது. கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் குழந்தைகள் அமர்ந்து படிக்க வேண்டும். கணினியை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

சமையலறை வாஸ்து

சமையலறைக்கு தென்மேற்கு அல்லது வடமேற்கு திசை சிறந்ததாக இருக்கும். சமையலை கிழக்கு நோக்கிச் செய்ய வேண்டும். அந்த பகுதியில் குறுக்கு காற்றோட்டம் இருப்பது அவசியம். கழிவறைக்கு வடமேற்கு திசையே சிறந்ததாகும். அங்கு காற்றோட்டம் இருப்பது அவசியமாகிறது. சமையலறையில் உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது. குளியல் பகுதி மற்றும் கழிவறையை மிகவும் சுத்தமாக பராமரிப்பது முக்கியம். வீட்டின் அழுக்கு எப்போதும் எதிர்மறையான ஆற்றலை உற்பத்தி செய்கிறது என்பதை கவனத்தில்கொள்க.

உடலில் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

வரவேற்பறை

வீட்டுக்கான வரவேற்பறை எப்போதும் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டின் மேற்கு திசையில் அல்லது தென்கிழக்கு திசையில் ஏர் கண்டிஷனை வைக்கலாம். அந்த அறையில் வைக்கப்படும் நாற்காலிகளின் எண்ணிக்கை எப்போதும் சமமாக இருக்க வேண்டும். வீட்டில் சீரற்ற தளபாடங்கள் வைக்கக்கூடாது. இதனால் செல்வம் பெருகாது. தெற்கு மற்றும் மேற்கு மூலைகள் மரச்சாமான்களை வைப்பது நன்மையை தரும்.

வாஸ்து சாஸ்திரத்தின் பயன்பாட்டிற்குப் பின்னால் உள்ள அடிப்படை சித்தாந்தம், அனைவரும் சிறந்த வாழ்க்கையை பெறுவதே ஆகும். அதன்மூலம் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது. அதனால் நமது வேலையை நாம் சிறப்பாக செய்யவும், நிறைவான வாழ்க்கையை வாழவும் வழிவகை செய்கிறது. வாஸ்துவை பின்பற்றுபவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழிநடத்துவதாக கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்ட கருத்துரைகள், அறிவியல்பூர்வமாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

click me!