Karthigai Deepam 2022 : டிசம்பர் 6ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள்! - எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

By Dinesh TG  |  First Published Nov 23, 2022, 12:03 PM IST

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கார்த்திகை தீப திருநாள் வரும் டிசம்பர் 6ம் தேதி செவ்வாய் கிழமை கொண்டாப்படுகிறது.
 


திருக்கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிக மழைபொழிவை தரும் கார் காலமாகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதமும் கூட ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்திருநாள் தான். கார்த்திகை தீபத்திருநாளன்று வீடுகள் மற்றும் கோவிலில் தீபவிளக்கேற்றி கொண்டாடுவது வழக்கம்.

அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திக்கை தீப திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்திருநாளில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். முன்னதாக மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்ப்படுவது வழக்கம்.

கார்த்திகை தீபத்திருநாளில், அனைத்து சிவ ஆலயங்கள் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மக்கள் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.



அதில் குறிப்பாக தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

  • ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.
  • இரு முக தீபம் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும்.
  • மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும்.
  • நான்கு முக தீபம் ஏற்றினால் செல்வம் அதிகரிக்கும்.
  • ஐந்து முக தீபம் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு தீபம் ஏற்றுவது நல்லது.

Latest Videos

karthigai amavasai : இன்று கார்த்திகை அமாவாசை! - முக்தி தரும் முன்னோர் வழிவபாடு! சகல செல்வங்களும் அள்ளித்தரும்

மேலும், 27 நட்சத்திரங்களையும் குறிக்கும் வண்ணம் 27 விளக்குகளை ஏற்றுவது மிகச்சிறந்தது. ஆக மொத்தத்தில் ஒரு வீட்டில் தீபம் ஏற்றும்போது 27 விளக்குகளை ஏற்றினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றிய பின்னரே மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!