காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் பார்க்கும் காட்சியின் பாதிப்பு அன்றைய நாள் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. காலை சரியாகத் தொடங்கினால், நாள் நன்றாகப் போகும். ஆனால் பலர் விழித்தவுடன் தன்னையறியாமல் செய்யும் சில தவறுகள் நாள் முழுவதையும் பாதிக்கிறது. அப்படியானால் காலையில் எதை பார்க்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கைகளை பார்ப்பது நல்ல அறிகுறியாகும். இந்த நேரத்தில் கிருஷ்ணர், சரஸ்வதி மற்றும் லட்சுமி ஆகியோர் உள்ளங்கையில் வசிப்பதாக நம்பப்படுகிறது. காலையில் எழுந்தவுடன், கடவுளின் பெயரை உச்சரித்து, உங்கள் உள்ளங்கைகளை உங்கள் முகத்தில் தேய்க்கவும். பின்னர் அன்றைய நாள் நல்ல பொழுதாக அமைந்திட வேண்டுதல் செய்யவும். இதற்குப் பிறகு, தண்ணீர் குடித்துவிட்டு சூரியனைப் பாருங்கள். சூரிய உதயத்திற்கு முன் எழுபவர்கள், வெளியில் சென்றால் சந்திரனையும் பார்க்கலாம். இவை அனைத்தும், அன்றைய நாளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. எனினும், எல்லோருக்கும் தினசரி நாட்கள் அப்படி அமைந்துவிடுவது கிடையாது. காலையில் நாம் பார்க்கும் சில விஷயங்கள் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன. அதுகுறித்து சில தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
கழுவப்படாத பாத்திரங்கள்
undefined
வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரம், இரவில் சமையலறையில் இருக்கும் அழுக்கு பாத்திரங்கள் வீட்டில் வறுமையை கொண்டு வரும் என்று கூறுகின்றன. இதுவொரு சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் இந்த தவறு உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருசில நேரங்களில் அது மோசமான விளைவையும் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் காலையில் அடுப்படியில் கழுவாத பாத்திரங்கள் இருக்குமானால், தயவுசெய்து உள்ளங்கையை பார்த்துவிட்டு, விருப்பமுள்ள கடவுளை நினைத்துக் கொண்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.
செல்லப் பிராணி
சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தூங்கி, காலையில் எழுந்தவுடன் அவற்றின் முகத்தில் தான் விழிப்பார்கள். நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் வாஸ்து சாஸ்திரம் அதற்கு எதிரான நிலைபாட்டை முன்வைக்கிறது. காலையில் செல்லப்பிராணியின் முகத்தைப் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிவிக்கிறது. எனவே முடிந்தால் செல்லப்பிராணிகளை அதற்கான இடத்தில் தூங்க வையுங்கள்.
நிழல்
உங்கள் சொந்த நிழலை நீங்கள் காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் சூரியனைப் பார்க்க வெளியே சென்றால், சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது மேற்குத் திசையில் உங்கள் நிழலைப் பார்த்தால், அது ஒரு தவறான அறிகுறி என்கிற கருத்தை வாஸ்து சாஸ்திரம் முன்வைக்கிறது.
கடிகாரம்
உடைந்த கடிகாரம் உடைந்த அல்லது நிறுத்தப்பட்ட கடிகாரத்தை வீட்டில் வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும். சில காரணங்களால் நீங்கள் கடிகாரத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதை கழட்டி ஓரமாக வைத்துவிடுங்கள். அதை செய்ய தவறினால், வீட்டில் எதிர்மறை விளைவுகள் உருவாகும். மேலும், காலையில் எழுந்ததும் நிற்கும் கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். இது கெட்ட சகுனமாக குறிப்பிடப்படுகிறது.
பெண்கள் ஏன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது இல்லை..? உங்களுக்கு தெரியுமா..?
விலங்குகள் பறவைகள் படம்
வாஸ்து மட்டுமல்ல, ஜோதிட ரீதியாகவும் காலை பொழுது மிகவும் மங்களகரமானதாக விளங்குகிறது. காலையில் எழுந்தவுடன் வனவிலங்குகள், பறவைகளின் உருவங்களைப் பார்க்கக் கூடாது. குறிப்பாக மிகவும் கோபத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் விலங்குகள், பறவைகளின் புகைப்படங்கள் நாளின் தொடக்கத்தில் யாரும் பார்க்கக்கூடாது. இதனால் உங்களைச் சுற்றி பிரச்னைகள் உருவாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
முகக் கண்ணாடி
காலையில் கண்ணாடியில் எதிர்மறை ஆற்றல் உள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே எழுந்தவுடன் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது தீங்கு விளைவிக்கும். ஒருவேளை அதை நீங்கள் பின்பற்றிவந்தால், அதனால் பண இழப்பு மற்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டில் குடியேறுவதாக கூறப்படுகிறது. காலையில் எழுந்து முதலில் முகத்தைக் கழுவுங்கள் அல்லது குளித்துவிட்டு பிறகு கண்ணாடியைப் பாருங்கள்.