உடலில் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Nov 15, 2022, 1:53 PM IST

மச்சத்தின் இருப்பை வைத்து, அதிர்ஷ்டத்தை கணக்கிடும் வழக்கம் ஜோதிட சாஸ்திரத்திலும் காண முடியும். அதன்படி எங்கு மச்சம் இருந்தால், எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


சாமுத்திர்கா லட்சண சாஸ்திரத்தில் உடலில் தோன்று மச்சம் குறித்து பல்வேறு குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆண்களுக்கு கூட இது பொருந்தும் என்பது தான் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட ஆண்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் போது, “அவனுக்கு என்ன மச்சக்காரன்” என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். அதனால் உடலில் மச்சம் தோன்றும் இடம் மட்டும், அதன்மூலம் கிடைக்கும் பலன் உள்ளிட்டவை ஆண் மற்றும் பெண் என இருவருக்குமே வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல மச்சத்தின் இருப்பை வைத்து, அதிர்ஷ்டத்தை கணக்கிடும் வழக்கம் ஜோதிட சாஸ்திரத்திலும் காண முடியும். அதன்படி எங்கு மச்சம் இருந்தால், எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கழுத்து மச்சம்

Tap to resize

Latest Videos

பலர் உடலில் மச்சத்தை அழகுடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் கழுத்தில் உருவாகும் மச்சம் அதிர்ஷ்டத்தோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. உங்கள் கழுத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் நிறைய நகைகளை அணிவீர்கள். நகை என்றால், வெறும் உலோகத்திலான ஆபரணங்கள் மட்டும் இல்லை. தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகளை தான் அணிவார்கள். இந்த தகுதி ஆண்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

கண்களில் மச்சம்

வலது கண்ணில் மச்சம் உள்ளவர்கள் காதல் ஆசை நிறைந்தவர்களாம். இது தவிர, இவர்கள் காதல் விஷயத்தில் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் தங்களை நம்பாமல் மற்றவர்களின் உதவியை நம்பியே இருப்பார்கள். அதேபோல இவர்களுக்கு வேண்டும் காதல் கைக்கூடி வந்தால், மென்மையாகிவிடுவார்கள். பெண்கள் விஷயத்தில் இந்த பலன் ஓரளவுக்கு கைக்கொடுக்கும். மென்மையான காதலன் கிடைத்தால், பெண்கள் பாடு திண்டாட்டம் தான். 

கிரீன் டீ vs புரோட்டீன் ஷேக்: உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிவது எது..??

உதட்டில் மச்சம்

உதட்டுப் பகுதியில் மச்சம் இருப்பது குறித்து இரண்டு குணாதிசியங்கள் கூறப்படுகின்றன. அதாவது வலது பக்கத்தில் மச்சமிருந்தால், அவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒருவேளை உதட்டின் இடதுப் பக்கத்தில் மச்சம் அமைந்துவிட்டால், அவர்களுக்கு காதல் ஆசை அதிகம் இருக்கும். அதாவது அது காதல் ஆசையாகவும் இருக்கலாம், காதல்கள் ஆசையாகவும் இருக்கலாம். இதனால் குறிப்பிட்ட நபர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

கட்டைவிரல் மச்சம்

உங்கள் கட்டை விரலில் மச்சம் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. கட்டை விரலில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், மிடுக்கானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அதேபோன்று இடது கன்னத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு பெரிய கனவுகள் இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க விரும்புவார்கள்.  மாறிவரும் காலத்திற்கு ஏற்ப புதிய விஷயங்களை ஆராய்வதைத் தொடர விரும்புவார்கள். இவர்களின் மனமும் மிகவும் கூர்மையாக இருக்கும்.
 

click me!