வீட்டில் வசிப்பவர்கள் மீது திருஷ்டி விழாமல் இருப்பதற்கும், வீட்டுக்குள் விஷங்கொண்ட உயிரினங்கள் வராமல் இருப்பதற்கும் ஆகாச கருடன் கிழங்கு வாசலில் கட்டப்படுகிறது. இதுதொடர்பான பலன்களை விரிவாக பார்க்கலாம்.
நாம் பின்பற்றிவந்த பல்வேறு வழக்கங்கள் இப்போது நம்மிடையே பயன்பாட்டில் கிடையாது. அதனுடைய காரண காரியம் தெரியாமல் பலரும் மறந்துவிட்டோம். அதில் ஒன்று தான் ஆகாச கருடன் கிழங்கு. மூடநம்பிக்கை, அறிவியல் வளர்ச்சி என்கிற பெயரில் முன்னேறிவிட்டதாக நினைத்துக் கொண்டு, இக்கிழங்கை பலரும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
இது பொல்லாதவர்களின் கண் திருஷ்டியை அகற்றுவதிலும், வீட்டுக்குள் விஷ உயிரினங்கள் உட்புகாமல் இருப்பதற்கு உதவுகிறது. ஒருசிலர் தான் இக்கிழங்கை தங்களுடைய வீட்டு வாசலில் கட்டி வைக்கின்றனர். ஆனால் அவர்களும் இதனுடைய முழு பயனையும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் ஆகாச கருடன் கிழங்கின் மகத்துவம் மற்றும் பலன்களை குறித்து தெரிந்துகொள்வோம்.
undefined
வீட்டின் முன்பு இந்த கிழங்கை கட்டி தொங்கவிட்டால், அது அப்பகுதியிலுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதையடுத்து கிழங்கிலிருந்து கொடி தழைக்கும். இது எவ்வளவு சீக்கரம் தழைக்கிறதோ, அவ்வளவு விரைவாக வீட்டில் செல்வமும் சுபிட்சமும் பெரும் என்பது ஐதீகம். அதேபோல ஆகாச கருடன் கிழங்கு ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால், நுண்கிருமிகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அவ்வப்போது சாமிபிராணி புகையை போடுவதால், எந்த நோய்த் தொற்றும் ஏற்படாது.
சூரிய உதயத்துக்கு முன் அரச மரத்தடி விநாயகரை வணங்கக்கூடாது- ஏன் தெரியுமா?
இதை வீட்டு வாயிலில் கயிற்றில் கட்டி வைத்தாலும், 24 மணிநேரமும் வேலையை செய்யும். நம் மீது யாரேனும் ஏவல் விட்டு இருந்தாலோ, சூனியல் வைத்திருந்தாலோ, அதை இக்கிழங்கு நீக்கிவிடும். வீட்டுக்குள் கெட்ட சக்திகள் எதுவும் வராது. எப்போது இந்த கிழங்கு அழுகிப் போகிறதோ அப்போது உடனடியாக வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட வேண்டும்.
மேலும் வீட்டில் பூஜை செய்து, மற்றொரு ஆகாச கருடன் கிழங்கை மாட்டிவைக்க வேண்டும். எங்கு கருடன் இருக்கிறதோ, அங்கு விஷ ஜந்துக்கள் எதுவும் அணுகாது. அதனால் தான் இதற்கு ஆகாச கருடன் கிழங்கு என்று பெயர் கூறப்பட்டுள்ளது.