வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் சக்கரை கொடுக்கக்கூடாது- காரணம் இதுதான்..!!

By Dinesh TGFirst Published Nov 13, 2022, 3:46 AM IST
Highlights

செல்வத்திற்கு அதிபதியான கடவுள் லட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது. அதுமட்டுமின்றி, ஆடம்பரத்தை அருளும் சுக்கிரனின் நாளாகவும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. ந்த நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
 

லட்சுமி தேவி சுக்கிரனுடன் இணைந்திருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுக்ரா மற்றும் லக்ஷ்மி இருவரும் செல்வத்தின் அருளாளர்கள். இந்த நாளில், லட்சுமி தேவியை வணங்குவது நன்மையை தருகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை நீங்கள் செய்யும் சிறு தவறு கூட, உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே, வெள்ளிக்கிழமையன்று லட்சுமியை வணங்கும் நாளில் செய்யக்கூடாத விஷயங்கள் பல உள்ளன. அதன்படி, வெள்ளிக்கிழமை என்ன நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாதவை

வடகிழக்கு மற்றும் வடக்கு திசையில் லட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. அந்த இடங்களில் குப்பை போன்றவற்றை சேர்த்துவைக்கூடாது. அதேபோன்று அந்த இடத்தில் குப்பைத் தொட்டி மற்றும் துடைப்பம் போன்ற பொருட்களை வைப்பதையும் தவிர்த்திடவும்.

வெள்ளிக்கிழமை நாளில் எந்த பெண்ணையும் அவமதிக்கக்கூடாது. குறிப்பாக வீட்டின் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், லட்சுமி மகிழ்ச்சியாக இருப்பாள். வெள்ளிக்கிழமை மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நாளும் இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு பெண்ணுக்கும் நாம் தீங்கு நினைக்கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மது அருந்தக் கூடாது. இப்படி செய்தால் லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வெள்ளிக் கிழமையன்று கடனுக்கு சர்க்கரை கொடுக்கக் கூடாது. ஜோதிடத்தின் படி, சர்க்கரை சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, கடனுக்கு சர்க்கரை கொடுப்பது சுக்கிரனை வலுவிழக்கச் செய்து, வீட்டில் வறுமையைத் தருகிறது.

சூரிய உதயத்துக்கு முன் அரச மரத்தடி விநாயகரை வணங்கக்கூடாது- ஏன் தெரியுமா?

வெள்ளிக்கிழமையன்று யாரிடமும் பெருமையோ, அகந்தையோ காட்டக்கூடாது. அன்னை லட்சுமி ஆணவத்தின் மீது தீய பார்வை கொண்டவள். எனவே, வெள்ளிக்கிழமைகளில் இதுபோன்ற செயல்களைச் செய்வதைத் தவிர்க்கவும்.

அன்னை லட்சுமியும் சமையலறையில் வசிப்பதாக ஐதீகம். எனவே, சமையலறை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களை வைத்தால், லட்சுமி வீட்டில் தங்கமாட்டாள்.

வெள்ளிக்கிழமை அன்று செய்யவேண்டியவை

வெள்ளிக்கிழமையன்று விரதம் அனுஷ்டிப்பதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். இந்த நாளில் காலையிலும் மாலையிலும் லட்சுமியை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

சனி பகவான் அருள் பெறுவதற்கு இதைச் செய்யுங்கள் போதும்..!!

வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு நடத்தும்போது 'ஓம் ஷும் சுக்ராய நமஹ்' அல்லது 'ஓம் ஹிமகுண்டமரினாலாபம் தியாதானம் பரமன் குரும் சர்வசாஸ்த்ரப்ரவாகதாரம் பார்கவம் ப்ரணமாமாயஹம்' என்கிற மந்தரங்களை உச்சரித்து வணங்கலாம். வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள், லட்சுமிக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். நீங்களும் வெள்ளை ஆடைகளை அணியுங்கள். வெள்ளியன்று வெள்ளைப் பொருட்களை தானம் செய்வதால் வாழ்வில் வளம் பெருகும்.

வெள்ளிக்கிழமையன்று எறும்புகள் மற்றும் பசுக்களுக்கு மாவு ஊட்டுவது அதிர்ஷ்டத்தைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியுடன் கணபதியை வழிபட வேண்டும். அப்போதுதான் ஒரு நபருக்கு லட்சுமி செல்வத்தை வணங்கும்போது, அதற்கு தடை ஏதுவும் வராமல் விநாயகர் பார்த்துக்கொள்வார். வெள்ளிக் கிழமைகளில் விநாயகப் பெருமானையும், லட்சுமியையும் வழிபடும் போது, அவர்கள் முன் தேங்காய் வைக்கவும். இரவில் விநாயகர் கோவிலில் தேங்காய் வைத்து வாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நிதி பிரச்சனைகள் நீங்கும்.
 

click me!