சூரிய உதயத்துக்கு முன் அரச மரத்தடி விநாயகரை வணங்கக்கூடாது- ஏன் தெரியுமா?

அரச மரத்தடியில் கடவுள்கள் வசிக்கின்றனர். அதனால் தான் தினமும் அதற்கு வழிபாடு நடத்துகிறோம். எனினும் அரச மரத்தை வழிபடுவதில் இன்னும் பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து பார்க்கலாம்.
 


இந்து மத வழிபாட்டில் அரச மரத்துக்கு தனி இடம் உண்டு. தமிழ்நாட்டிலும் அரச மரம் என்றும், வட இந்தியாவில் அஸ்வத் மரம் என்றும், இலங்கையில் போதி மரம் என்றும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தில் விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட பல் தெய்வங்களுடைய அம்சம் வசிப்பதாக நம்பப்படுகிறது. பகவத் கீதையில் கடவுள் கண்ணபிரான் அஸ்வத்தா மரத்தில் (அரச மரம்) வசிப்பதாக கூறியுள்ளார். இம்மரத்தை தினமும் வழிபடுவதன் மூலம் சனி தோஷம், சடே சதி, தையா தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கல் கூறுகின்றன. மேலும் இதை வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் அருள் கிடைக்கும். அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்திவந்தால், அனைத்து பிரச்னைகளும் நீங்கும். இவ்வாறு பல்வேறு குணநலன்கள் கிடைக்கப்பெற்ற அரச மரத்தை, எப்போது வணங்க வேண்டும், எப்போது வணங்கக் கூடாது என்பது குறித்து பலரும் தெரிந்திருக்கவில்லை. அந்த மரத்தில் கடவுள் வாசம் செய்வதால் நாளின் எல்லா நேரங்களிலும் வழிபடுவது நல்லதல்ல. அரச மரத்தை வழிபடும் முன் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிந்துகொள்வோம். 

அரச மரம்

Latest Videos

ஸ்கந்த புராணத்தில் அரச மரத்தை புனித மரம் என்று கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், அஸ்வத்த மரத்தின் வேரில் விஷ்ணுவும், தண்டில் கேசவனும், கிளைகளில் நாராயணனும், இலைகளில் ஹரியும், பழங்களில் எல்லா தெய்வங்களும் வசிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அரச மரம் விஷ்ணுவின் ஒரு வடிவம். அதை வணங்கி சேவை செய்பவன் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். முன்னோர்களின் ஆசிகள் அவனுக்கு கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

வழிபடும் நேரம்

அரச மரத்தை சூரிய உதயத்திற்கு முன் வணங்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில் சூரிய உதயத்திற்கு முன் அரச மரத்தில் ஏழை லட்சுமி என்கிற தரித்ரா லட்சுமி வாசம் செய்கிறாள். அப்போது வழிபட்டால், ஏழை லட்சுமியை வழிபட்டது போல் இருக்கும். இதனால் வீட்டில் வறுமை ஏற்படுகிறது. வாழ்க்கையில் பிரச்சனைகள் தொடங்குகின்றன. சூரிய உதயத்திற்கு முன் அரச மரத்தின் அருகில் கூட செல்ல வேண்டாம். சூரிய உதயத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அரச மரத்தை வழிபடலாம்.

சனி பகவான் அருள் பெறுவதற்கு இதைச் செய்யுங்கள் போதும்..!!

வழிபடும் முறை

அரச மரத்தில் தினமும் கடவுள் வசிக்கிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனிக்கிழமைகளில் அரச மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் அன்றைய நாளில் மரத்துக்கு தண்ணீர் விட்டு வணங்குவது நல்லது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் விட்டு வணங்கக்கூடாது. அன்று மரத்தடி தண்ணீர் வைத்து வழிபடலாம். இதன்மூலம் வீட்டிலுள்ள வறுமை நீங்குகிறது. இறந்த மரத்தை ஒருபோதும் வெட்டக்கூடாது. இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் துன்பம் அடைவதுடன், பரம்பரை வளர்ச்சியும் தடைபடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிடைக்கும் பலன்கள்

அரச மரத்தின் முன்பு நின்று நீங்கள் என்ன வழிபட்டாலும், அது நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீராடி, வழிபட்டால், சுற்றி வருவதால் எல்லா பாவங்களும் நீங்கும். மேலும் உங்களைச் சுற்றி உருவாகும் எதிர்மறையான எண்ணங்களை அழிக்க முடியும். அரச மரத்தை வழிபடுவதால் தோஷம், பித்ரு தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களும் நீங்கும். அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட்டு, அரச மரத்தடியில் அமர்ந்து கடவுள் வாழ்த்துப் பாடலை பாடினால் துன்பங்கள் குறையும்.

click me!