பெண்கள் ஏன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது இல்லை..? உங்களுக்கு தெரியுமா..?

By Dinesh TGFirst Published Nov 17, 2022, 2:52 PM IST
Highlights

பெரும்பாலான கோயில்களில் தரையில் விழுந்து பக்தர்கள் தெய்வத்தை வணங்குவார்கள். எதற்காக தரையில் விழுந்து கடவுளை வணங்க வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர், கொடி மரத்துக்கு கீழே தரையில் விழுந்து கடவுளை வணங்குவர். இது கடவுள், ரிஷிகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதே ஆகும். இப்படி விழுந்து வணங்கும் போது, நமது உடல் மற்றும் மன திறன்கள் அதிகரிக்கின்றன. இதை எப்படிச் செய்வது? ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதிலிருக்கும் தனித்தனி நடைமுறை என்ன? இதனுடைய பலன்கள் என்ன? தரையில் விழுந்து வணங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது என்றால் என்ன?

அதற்கு முன்னதாக சாஷ்டாங்கம் என்கிற சொல்லின் பொருளை தெரிந்துகொள்வோம். தமிழில் இதை நெடுஞ்சானக்கிடாயாய் விழுந்து வணங்குவதல் என்று கூறப்படுகிறது. அதன்படி ச என்றால் எட்டு, அங்க என்றால் உடல் உறுப்புகள். அதாவது நமது உடலின் எட்டு பாகங்களும் தரையைத் தொட்டு விழுந்து வணங்குவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும். 

தொழுதலுக்கு பயன்படும் உடலில் 8 உறுப்புகள்

1 இரண்டு கால்விரல்கள்
2. இரண்டு முழங்கால்கள்.
3. இரண்டு உள்ளங்கைகள்.
4. மார்பு
5. நெற்றி.

பயபக்தியுடன் வணங்குவதன் மூலம் கடவுளிடம் முழுமையான சரணாகதியை வெளிப்படுத்துவது தான் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும் நடைமுறையின் நோக்கமாகும். கடவுள், குருமார்கள், பெரியோர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதைச் செய்யும் இந்த பண்பாடு, நமது பாரம்பரியத்தின் சிறந்த அடையாளமாகும். தகுதியான நபர்களின் காலில் விழுந்து வணங்கும் போது, நமது அகங்காரத்தை விட்டுவிட்டு அவரிடம் சரணாகதி அடைகிறோம். 

சரணாகதியில் அகந்தைக் கூடாது

'சாஷ்டாங்க நமஸ்காரம்' என்பது வழக்கமான பயிற்சியாக இல்லாமல் மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் செய்யப்பட வேண்டும். இது நம்மை நாமே உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழி. இதன்மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அகந்தை நீங்குகிறது. 

குடும்பத்தின் மீது கண் திருஷ்டி விழாமல் பாதுகாக்கும் ஆகாச கருடன் கிழங்கு- முழு பலன்கள் இதோ..!!

பெண்கள் ஏன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது இல்லை?

பெண்களில் மார்பு, வயிறு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகள் தரையை தொடக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி பெண்களுக்கு பஞ்சங்க நமஸ்காரம் என்று சொல்லப்படக்கூடிய, உடலின் 5 பாகங்கள் மட்டும் தரையை தொட்டு வணங்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து 9 மாதங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறாள். இவை உயிரையும் வளர்ச்சியையும் தரக்கூடிய உறுப்புகள் என்பதால் பூமியைத் தொடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை அறிவியல் காரணத்துடன் யோசிக்கையில், பெண்கள் குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க இயலாது. அதனால் அவர்களுக்கு பஞ்சங்க நமஸ்காரம் பெரியவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இறைவனுக்கு முன்பாக நாம் 'சாஷ்டாங்க நமஸ்காரம்' செய்யும்போது, அந்த ஆலயத்தில் இறைவனை வழிபட்ட 'பக்தர்களின்' பாதத் தூசியை நம் உடல் தொடுகிறது. அதன்மூலம் ஒவ்வொரு பக்தர்களும் சொர்க்கத்துக்கு செல்ல இடம் கிடைக்கிறது. மேலும் நூறு பிறவிகளில் செய்யும் பாவங்கள் நீங்குகின்றன. சாஷ்டாங்க நமஸ்காரத்தின் அதிகபட்ச மற்றும் சரியான பலன்களைப் பெற ஒவ்வொரு நாளும் 'சாஷ்டாங்க நமஸ்காரம்' தவறாமல் செய்யப்பட வேண்டும். மனதில், எந்தவிதமான எதிர்ப்பையும் வைத்துக்கொண்டு இதை செய்யவே கூடாது. நமஸ்காரம் செய்வது நமது அகந்ததையை அழித்துவிடும். ஆனால் இதை எளிதில் அடைய முடியாது. தொடர் முயற்சிகள் மட்டுமே பலன் தரும்.

click me!