கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. கார்த்திகை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை அமாவாசை விரத பலன்கள் குறித்து இதில் காணலாம்.
காந்தள் பூக்கம் மலரும் கார்த்திகை மாத அமாவாசை நாளில்தான் திருப்பாற்கடலிலிருந்து மகாலட்சுமி தேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கார்த்திகை அமாவாசை திருநாளில் ஆற்றங்கரை அல்லது குளக்கரைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனிதநீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை அமாவாசை
இந்த வருடம் கார்த்திகை முதல் திங்களைத் தொடர்ந்து வரும் புதன் கிழைமாயன இன்று கார்த்திகை அமாவாசை வருகிறது. அதாவது, ஆங்கில தேதிப்படி நவம்பர் 23ம் தேதி காலை 6.34 மணிக்கு தொடங்கி அடுத்த நாளான 24ம் தேதி அதிகாலை 4.50 மணி வரை அமாவாசை திதி நடைபெறுகிறது.
கார்த்திகை அமாவாசையன்று செய்ய வேண்டியவை
புதன்கிழமை அன்றே அமாவாசை தொடங்கிவிடுவதால், அமாவாசை நாளில், நதி, ஆறு, குளக்கரைகளில் புனித நீராடுவதும், முன்னோர்களின் பெயரில் திதி கொடுப்பதும் மாபெரும் புண்ணியம் கிடைக்க வழிசெய்கிறது.
இந்த கார்த்திகை அமாவாசை நாள், பித்ருதோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பரிகாரம் செய்ய மிக உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
கார்த்திகை அமாவாசை நன்நாளில் கீழ்காணும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் வழிமுறைகளை கடைபிடித்தால் செல்வ செழிப்புகள் உண்டாகும் என்பது ஐதீகம். அதை நீங்களும் கடைபிடித்து ஆனந்தமாய் வாழுங்கள்.
முக்தி தரும் முன்னோர் வழிபாடு
பெற்றோரை இழந்த நபர் இன்நாளில் பெற்றோர் உட்பட முன்னோர்களை நினைத்து விரதமிருந்து அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம் மற்றும் நல்லதும் கூட.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தவறாது முன்னோர் வழிபாடு செய்வதும் மற்றும் தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருதோஷம் நீங்கும். முக்தியும் கிடைக்கும்.
சனி தோஷம் நீங்கும்
கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். சிவலிங்கத்தை நெய் கொண்டு அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் மரிக்கொழுந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதும் நன்மை பயக்கும்.
அமாவாசை திருநாளில் ஆடை தானம் வழங்குவதன் மூலம், சனி தோஷத்திலிருந்து நாம் விடுபடலாம். கெட்ட காலத்திலும் சனியின் பார்வை நன்மை பயக்கும்.
திருமண மாதம்
கார்த்திகை மாதத்தில், விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இம்மாதத்தில் இரு மனங்களின் சேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகியவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, இந்த கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது.
செல்வ செழிப்பை தரும் வழிபாடு