திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1ம் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்;- திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க;- குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்தியும் ஒன்றா? இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும். பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி எண் 9445014452 ,தலைமையக கைப்பேசி எண் 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன் தெரியுமா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!