
அறுபடை வீட்டின் அதிபதி:
தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும்அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான். என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.
தந்தைக்கே பாடம் சொன்ன தகப்பன்சாமி! சுவாமிமலை 4-வது படைவீட்டில் வழிபட்டால் கிடைக்கும் மகா ஞானம்!
ஆறுபடை வீடு என்றால் என்ன?
சூரபத்மனை அழிக்கப் போர்க்கோலம் பூண்டு, தனது படைகளுடன் தங்கியிருந்த ஆறு இடங்களைக் குறிக்கிறது. இது 'ஆற்றுப்படை வீடு' என்பதன் மருவி, முருகனின் ஆறுபடை வீடுகள் கருதப்படுகிறது. இந்த ஆறு தலங்களும் மனித உடலின் ஆறு ஆதாரங்களையும் மூலாதாரம் முதல் ஆக்கினை வரை குறிக்கின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை.
ஐந்தாம் படை வீடு-திருத்தணி:
சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளியை மணம் முடித்து வள்ளியுடன் சார்ந்த சொரூபமாக முருகப்பெருமான் காட்சி கொடுத்த ஸ்தலம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி. தணி என்றால் தனிப்பது என்று பொருள். திரு என்பது மேன்மை, சிறப்பு, வளம், செல்வம், புனிதத்தன்மை ஆகியவற்றை குறிக்கிறது. இப்படி முருகப் பெருமானின் கோபத்தை தணித்த இடம் என்பதால் இந்த ஊரானது திருத்தணி என இத்தலம் அழைக்கப்பட்டது.
சித்தர்கள் போற்றும் 3-வது படைவீடு! பழனி முருகனை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகளும் ராஜயோகமும்!
பலன்கள்:
துன்பங்கள் விலகி மனம் சாந்தம் அடையும் என்றும் கூறப்படுகிறது. கோபத்தால் தனது வாழ்க்கையை இழந்தவர்கள் அல்லது கோபம் நீங்க இந்த கோயிலுக்கு வந்து இறைவன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை மனதார வேண்டிக் கொள்கின்றனர். மேலும், வாழ்க்கையில் தீராத கடன்கள் அல்லது நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், 'தணிகை' (தணித்தல் - குறைத்தல்) மலை முருகனைத் தரிசித்தால் கஷ்டங்கள் குறையும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு 2 முறை திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து வந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனின் கோபம் தணிந்த இடம் என்பதால், இந்தக் கோயிலில் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக சுவாமிக்கு புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யோகி பாபு இந்த கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை பார்த்திருக்கலாம்.
தீராத வினைகளைத் தீர்க்கும் அறுபடை வீடுகள்! எந்தப் படைவீட்டில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?