
அறுபடை வீட்டின் அதிபதி:
தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும்அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.
மூன்றாவது படை வீடு பழனி:
முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறப்படுகிறது. மாம்பழத்திற்காக கோபம் கொண்டு பெற்ற தந்தை தாய் மற்றும் சகோதரன் யாரும் வேண்டாம் என்று எனக்கென்று ஒரு தனி உலகம் எனக்கென்று ஒரு தனி நாடு என்று அமைத்துக் கொள்ள போகிறேன் என்று கூறிவிட்டு அமர்ந்த இடம் தான் பழனி. கோயிலில் ஆண்டி கோலத்தில் வந்த முருகன் ராஜ கோலத்தில் அலங்கரிக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது கோயிலுக்கு சென்று அரசன் கோலத்தில் முருகனை தரிசித்தால் நல்லதே நடக்கும் என்றும் கூறுவர். முருகன் மலை மீது அமர்ந்திருப்பார். பலன்கள்: இக்கோயிலுக்கு வந்து சென்றாள் தீராத நோய்கள் கூட தீரும் என்றும் கூறப்படுகிறது. ஞானம் மற்றும் அணு அமைதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.