தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் விரிவாக்கப் பணி.. ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்கள்

By Ramya s  |  First Published Aug 8, 2023, 3:00 PM IST

சென்னை தி.நகரில் உள்ள ஏழுமலையான் கோயில் விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.5.11 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.


சென்னை தி.நகர், வெங்கட நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோயிலை சுற்றி அமைந்துள்ள 3 பேருக்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் பரப்பளவிலான இடங்களை வாங்கி விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

3 ஆண்டுகளுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இதற்காக கோயில் அருகே உள்ள நிலங்களை வாங்கும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த கோயில் விரிவாக்க பணிகளுக்கு ரூ.14 கோடி செலவாகௌம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிதி திரட்டும் பணியும் நடந்து வருகிறது. அதன்படி இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் சுமார் 8 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்காக பூதான் என்ற திட்டம் ஒன்றையும் தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

Latest Videos

undefined

இந்த சூழலில் தேவஸ்தானத்தின் சென்னை கோயில் விரிவாக்க பூதான் திட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 9 பேர் ரூ.5.11 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. தேவஸ்தானத்தின் சென்னை – புதுச்சேரி மண்டல ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டியிடம் அவர்கள் வழங்கினர். இந்த தொகை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கருணாகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. தி.நகரில் உள்ள ஏழுமலையான கோயில் 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aadi Krithigai 2023 : ஆடி கிருத்திகை முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா..!!

click me!