தேனிமாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித் திருவிழா முன்னிட்டு இன்று நீலாந்தேவி, சுயம்பு சனீஸ்வர பெருமாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்புவாய் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஒரே ஸ்தலம் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.இத்தலத்திற்கு முன்பாக முல்லைப் பெரியாறும் சுருளி நதியும் இணைந்து வரும் உபநதியான சுரபி நதி ராஜ வாய்க்காலில் ஜீவ நதியாக ஓடுகிறது.
இதுவே இத்திருத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆடித் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்காக தடுப்புகளால் பாதை அமைக்கப்பட்டுள்ளது.சனைச்சர பகவானை எளிதில் தரிசிக்கும் வகையில் பலகைகளால் உயர் மேடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கேரளா வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இன்று இத்திரு கல்யாண வைபவம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு 9 சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. தென் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய சுயம்பு சனீஸ்வர பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாணம் பக்தர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஆற்றியது.