நகையை அடகு வைக்கும் முன்பு இதை செய்தால் போதும்.. சீக்கிரமே நகை நம் கைக்கு வரும்..

By Ramya s  |  First Published Aug 5, 2023, 1:23 PM IST

ஒரு பரிகாரத்தை செய்துவிட்டு அடகு வைத்தால், விரைவில் நகை மீண்டும் நமது கைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. அந்த பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


எதிர்பாராத செலவு வந்துவிட்டாலோ அல்லது அவசரமாக பணம் தேவை என்றாலோ உடனே நகையை அடகு வைத்து பணத்தை புரட்டுவதே பெரும்பாலானோரின் நிலையாக உள்ளது. ஆனால் அடகு வைத்த நகையை திருப்புவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு பரிகாரத்தை செய்துவிட்டு அடகு வைத்தால், விரைவில் நகை மீண்டும் நமது கைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. அந்த பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடினமான சூழலில், வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையில் தான் நாம் அடகு வைப்போம். ஆனால் அந்த கடினமான சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தான் நம் எண்ணம் அப்போது நகையை எப்படி திருப்புவது என்று யாருமே யோசிக்க மாட்டோம். இதனால் எப்படி நகையை திருப்புவது என்று தெரியாமல் தவிப்போம். எனவே அடகு வைக்கும் முன் பரிகாரம் செய்தால், அடகு வைத்த நகை விரைவில் அந்த பரிகாரத்தின் மூலம் நமக்கு நகை திரும்ப கிடைக்கும்.

Latest Videos

undefined

ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது..

மேலும் யாராவது நகை கடன் கேட்டாலும், இந்த பரிகாரம் செய்து கொடுத்தால், நம்மை ஏமாற்றாமல் நகையை திருப்பி கொடுப்பார்கள். அதற்கு முதலில் நாம் அடகு வைக்கும் நகைகளை முதலில் சுத்தமாக கழுவ வேண்டும். தண்ணீர். பின்னர் பசுமாட்டு கோமியத்தில் நகையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது கல் உப்பை போட்டு அதில் அடகு வைக்கும் நகைகளை வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் அதன் மேல் உப்பை போட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு நகை அப்படியே இருக்க வேண்டும். அதன் பின்னர், கற்பூரம் ஏற்றி, இந்த நகையை அடமானம் வைக்கப் போகிறோம், அது விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதன், பின்னர் நகையை எடுத்து சுத்தமான தண்ணீரில் மீண்டும் கழுவ வேண்டும். பின்னர் நகையை அடகு வைக்க வேண்டும். அடமானம் வைக்கும் போது அடமான சீட்டை வழங்குவார்கள். அந்த சீட்டை ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த அடமானத் தொகையிலிருந்து ஏதேனும் சிறிய தொகையை எடுத்து, ஜெராக்ஸ் எடுத்த ரசீதில் வைத்து ஏற்கனவே நகையில் வைத்திருந்த கல் உப்பில் சிறிது எடுத்து அதனுடன் மடித்து வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். மீதமுள்ள உப்பை தண்ணீரில் கரைத்து, கால்கள் படாத இடத்தில் ஊற்றவும். தினமும் பூஜை செய்யும் போது தூப தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நாம் அடகு வைத்த நகை விரைவில் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

பூனை குறுக்கே வந்தால் கடந்து செல்வது துரதிர்ஷ்டமா? பூனையால் வரும் நல்ல பலன்கள் என்ன தெரியுமா?

click me!