பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்கள் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்..!

By vinoth kumarFirst Published Aug 2, 2023, 1:08 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோவில். 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் பல்வேறு விசேஷ தினங்களில் சாமி வழிபாடு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோவில். 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் பல்வேறு விசேஷ தினங்களில் சாமி வழிபாடு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் ஆதி திராவிட வகுப்பு சார்ந்தவர்களுக்காக காளியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையும் படிங்க;- தி.மலையில் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு! தடுப்புகளை மீறி சாமி தரிசனம்! நடந்தது என்ன?

இதனடையே ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த தங்கராசு சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஊரின் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு தங்கள் இன மக்களும் உள்ளே சென்று தரிசனம் செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்டோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;-  இந்த 4 ராசிகள் உடலுறவை ஒருபோதும் கைவிடமாட்டார்கள்; காமமே அவர்களது வாழ்க்கை..!!

இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பட்டியலில் இன மக்கள் உள்ளே சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்த முடிவு செய்த நிலையில் இன்று காலை முதல் அங்கு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பட்டியல் இன மக்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று பொங்கல் வைத்து சாமி வழிபாடு மேற்கொண்டனர். 

click me!