பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில்.. 1000 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

By Ramya s  |  First Published Aug 2, 2023, 11:17 AM IST

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ககன்மாத் கோயில் அதன் தனித்துவமான கட்டிடக்கலையை பறைசாற்றுகிறது.


ஆன்மீக பூமியாக கருதப்படும் இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில் நம்ப முடியாத ஆச்சர்யங்களையும், மர்மங்களையும் கொண்ட பல கோயில்களும் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கோயிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த பிரமாண்டமான கோவில், பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று சொன்னால் உங்கள் நம்ப முடியுமா? ஆம் உண்மை தான். மத்திய பிரதேச குவாலியர் நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் மொரீனா மாவட்டத்தில் உள்ள சிஹோனியாவில் ககன்மத் கோயில் அமைந்துள்ளது.

ககன்மாத் கோவில் மர்மங்கள்

Latest Videos

undefined

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் ககன்மாத் கோயில் பல மர்மங்களையும், ரகசியங்களையும் கொண்டுள்ளது. பெரும் புயல்கள் வந்தாலும் இந்த மர்ம கோயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதை சுற்றி கட்டப்பட்ட பல சிறிய கோயில்கள் அழிக்கப்பட்டாலும் இந்த கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த கோயிலை கட்ட பயன்படுத்தப்பட்ட கற்கள், சுற்றுவட்டார பகுதிகள் எங்கேயும் கிடைக்கவில்லை.

இந்த கோயிலில் அனைத்து கற்களும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு அதிசய சக்தி இந்த கோயிலை பாதுகாக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 120 அடி உயரமுள்ள இந்தக் கோயிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக உள்ளது.  இக்கோயிலின் வரலாறு சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் கச்வா வம்சத்தின் அரசனால் தனது அன்புக்குரிய ராணிக்காக கட்டப்பட்டது.

தனித்துவமான கட்டிடக்கலைக்கு உதாரணம்

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ககன்மாத் கோயில் அதன் தனித்துவமான கட்டிடக்கலையை பறைசாற்றுகிறது. இந்த கோயிலின் நடுவில் கற்களை ஒன்றோடு ஒன்று இணைத்து சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், அதன் கட்டுமானத்தில் சுண்ணாம்பு அல்லது சாந்து பயன்படுத்தப்படவில்லை. 120 அடி உயரமுள்ள கோயிலும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கோயிலைப் பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருக்குமாம். அதன் கற்கள் காற்றில் ஆடுவதைக் காணலாம். ஆனால் ககன்மாத் கோவில் பலநூறு ஆண்டுகளாக இப்படியே நிற்கிறது. இந்த கோவிலை சுற்றி உள்ள கோவில்கள் அனைத்தும் உடைந்து கிடக்கிறது. ஆனால் கக்கன்மாத் கோவில் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.

பேய்கள் கட்டிய கோயில்

இந்த கோயிலை பேய்கள் இரவில் கட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் குரலைக் கேட்டு, பேய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதனால் அந்த கோயில் வேலை முழுமையடையாமல் இருந்தது. முடிதிருத்தும் சாதியை சேர்ந்த ஒன்பது மணப்பெண்கள் ஒன்றாக இக்கோயிலின் முன் வரும் நாளில் இந்த கோவில் தானாக மறைந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் இந்த கோயிலில் யாருமே தங்கமாட்டார்களாம்.

மொரீனாவில் அமைந்துள்ள கக்கன்மாத் கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான இடமாகும். கோயிலின் சுவர்களில் இருக்கும் தெய்வச் சிலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கஜுராஹோவை நினைவூட்டுகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளோ அல்லது வேறு யாராவது கோயிலில் இருக்கும் கல்லை எடுக்க முயன்றால் உடனே அந்த கோயில் கட்டடம் குலுங்கத் தொடங்குமாம். உடனே அவர்கள் பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி விடுவார்களாம்.

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் அதன் தோற்றம் குறித்து பல விவாதங்களை எழுப்பும் ககன்மாத் கோயில் 1000 ஆண்டுகளாக தொடரும் புதிராகவே உள்ளது. இந்த கோயிலின் தனித்துவமான கட்டிடக்கலை உலகின் தொலைதூர மூலைகளிலிருந்து ஆர்வமுள்ள பயணிகளை ஈர்த்துவருகிறது.

சாம்பல் மட்டுமே ஆடை.. உயிருடன் இருக்கும் போதே மரணச் சடங்கு.. நாக சாதுக்கள் பற்றி தெரியுமா?

click me!