என்னது.. இனிமே திருப்பதி லட்டு முன்பு மாதிரி இருக்காதா? அதிர்ச்சியில் பக்தர்கள்?

By vinoth kumar  |  First Published Aug 1, 2023, 3:08 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 


உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கு  இனி கர்நாடக மாநிலத்தின் நந்தினி நெய் வாங்கப்போவதில்லை என தேவஸ்தான நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதி லட்டில் சாதாரணமாக கடைகளில் வாங்கும் லட்டுவை விட சுவை சிறப்பாக இருக்கும்.  இதன் சுவைக்கு முக்கிய காரணம் கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, நெய் உள்ளிட்டவையாகும். லட்டு தயாரிப்பதற்கு தேவையான நெய்யை கடந்த 2019ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் நந்தினி பால் கூட்டுறவு விற்பனை நிறுவனம் தேவஸ்தானத்திற்கு விற்பனை செய்து வந்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கர்நாடகாவின் நந்தினி நெய்யின் வினியோகமானது நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாகவே நந்தினி நெய்யில் தான் லட்டு தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி கர்நாடக நந்தினி பால் விலையை உயர்த்தியதை அடுத்து நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

அதன்படி நந்தினி நெய்யின் விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த விலை உயர்வை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கவில்லை. இதையடுத்து நந்தினி நெய் தொடர்பான ஒப்பந்தத்தை  புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேறு நிறுவனத்திடம் திருப்பதி தேவஸ்தானம் நெய் வாங்க உள்ளது. இந்த நெய்யின் காரணமாகவே திருப்பதி லட்டுவின் ருசியாக இருப்பதாக கோயில் நிர்வாகம் பலமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திருப்பதி தேவஸ்தானம் லட்டு தயாரிப்புக்கான நெய்யை அமுல் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!