Pournami Girivalam: ஆடி மாத பவுர்ணமி.. ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தபடியே வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள்..!

Published : Aug 01, 2023, 12:55 PM ISTUpdated : Aug 01, 2023, 07:36 PM IST
Pournami Girivalam: ஆடி மாத பவுர்ணமி.. ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தபடியே வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள்..!

சுருக்கம்

நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். 

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். 

நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு, அவரின் அருளை பெற்று செல்வார்கள்.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை..!

இந்நிலையில் ஆடி மாத பவுர்ணமி தினமாக இன்று ஆகஸ்ட் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை அதிகாலை 1:25 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை அதிகாலை 1.09 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் அறிவித்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கிரிவல செல்ல தொடங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தபடியே பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 

இதையும் படிங்க;-  ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

மறுநாள் வரை பவுர்ணமி இருப்பதால் இன்று நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!