சனி பெயர்ச்சி: பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

By Velmurugan sFirst Published Jan 17, 2023, 12:41 PM IST
Highlights

திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனி பெயர்ச்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

இன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிபகவான் மகர ராசியிலிருந்து  கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார், சனி கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து விடுபடுவார்கள் அதேசமயம் மீனம் ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில் சனீஸ்வரன் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஓசூரில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் அச்சம்

அதன்படி திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு என்னும் ஊரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் சனிப்பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது இவ்வாறு பிரசித்தி பெற்ற ஆலயத்தில் சனி பரிகார பூஜை வழிபாடு செய்வதற்காகவும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.

ஜன. 31ல் தொடங்குகிறது டெட் இரண்டாம் தாளுக்கான தேர்வு 

அந்த வகையில் இன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நடைபெறுவதால் பொங்கு சனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது மேலும் ஆலய தலைவிருட்சமான வன்னி மரத்தின் கருப்பு துணியில் தேங்காய் வாழைப்பழம் எள்ளு உள்ளிட்ட பொருட்களை கட்டி பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

click me!