Sani Peyarchi 2023 : மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு இடம்பெயரும் "சனி"! துலாம், தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம்!

By Dinesh TG  |  First Published Jan 17, 2023, 12:05 PM IST

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை.... சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை என்பது ஐதீகம். இன்று நடைபெறும் சனிப் பெயர்ச்சி மூலம் என்னென்ன ராசிகள் என்னென்ன பலன்களை பெறுவார்கள் என இப்பதிவில் காணலாம். 
 


சனிப்பெயர்ச்சி!

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியான் இன்று சனி பகவான் மகர ராசி அனுஷம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசி அனுஷம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். சனிபகவான் தன்னுடைய சொந்த ராசியான மகரத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசிக்கு அதிபதியாக செல்கிறார். 

Tap to resize

Latest Videos

17-ம்தேதியான இன்று ஜென்மராசி படி, சனி பகவான் கும்ப ராசியில் நிற்கிறார். அதன் மூலம்  கும்ப ராசிக்கு  அடுத்து உள்ள மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் பாகமான விரய சனியும். ஏற்கனவே கும்ப ராசிக்கு நடந்து வரும் ஏழரை சனியின் 2-வது பாகமான  ஜென்மசனியும்.  கும்ப ராசிக்கு முன்னதாக உள்ள மகர ராசிக்கு ஏழரை சனியின் 3-ம் பாகமான பாத சனியும் தொடங்குகிறது.  

சனிபகவான் ஆதிக்கத்தில் வரும் 6 ராசிகள்

  • ஏழரை ஆண்டுகள் தன் பிடியில் வைத்திருக்கும் சனிபகவான்... 
  • கும்பம் - ஜென்ம சனி (ஏழரை மத்திய பகுதி)
  • மீனம் - விரய சனி (ஏழரை முதல் பகுதி)
  • மகரம் - பாத சனி (ஏழரை கடைசி பகுதி)
  • கடகம் - அஷ்டம சனி
  • சிம்மம் - கண்டகச் சனி
  • விருச்சிகம் - அர்தாஷ்டம் சனி

மேற்கண்ட ஆறு ராசிக்கார்கள் சனியின் நேரடிப் பார்வையில் வருகிறார்கள். மற்ற ராசிக்காரர்களான 

  • மேஷம் - லாப சனி
  • ரிஷபம் - கர்ம சனி 
  • மிதுனம் - பாக்கிய சனி
  • தனுசு - சகாய சனி
  • துலாம் - பஞ்சம சனி
  • கன்னி - ரோக சனி

ஆகிய ராசிக்காரர்கள் சனியில் பார்வையில் இல்லாமல் யோகப் பலன்களை பெறுவர் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. 
 

click me!