திருப்பதி ஏழுமலையானை நிதானமாக தரிசிக்கலாம்.. அதுவும் வெகு அருகிலேயே..! பலருக்கும் தெரியாத ரகசியம்..

By Ramya s  |  First Published Sep 25, 2023, 12:19 PM IST

பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றாலும், பக்தர்கள் மன திருப்தியுடன் திரும்பி செல்கின்றனர்.


உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலகின் பணக்கார கடவுளாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் ஏழுமலையான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றாலும், பக்தர்கள் மன திருப்தியுடன் திரும்பி செல்கின்றனர். மேலும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு தங்களால் இயன்ற அளவுக்கு காணிக்கை செல்த்தி வருகின்றனர். அதே நேரம் அம்பானி போன்ற பெரும்பணக்காரர்கள் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும், லட்சக்கணக்கான பணத்தையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

Tap to resize

Latest Videos

திருப்பதி கோயிலில் "காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்யும் திருப்பதியில், ஒரே நாளிலே உண்டியல் நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு சர்வ சாதாரணம்.

 

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?

ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.  

உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அப்போது “ இந்த உண்டியல் நிரம்பிவிட்டது . இதைக்கச்சிதமாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் " என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். தைரியமாக கையெழுத்துப் போடலாம். இது சம்பிரதாயத்துக்காக செய்யப்படுகின்ற ஒரு விஷயம் தான். ஆதி காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறை என்பதால் அதை தேவஸ்தானம் இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது .

இப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா? மீண்டும் ஒருமுறை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின் போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு வரலாம். ஆனால் இப்படிப்பட்ட அரிய வாய்ப்பு, காவாளம் உண்டியல் நிரம்பும் போது அதன் அருகில் நிற்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

click me!