Theipirai Ashtami: தேய்பிறை அஷ்டமி.. ஆறகளூரில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது!

By vinoth kumar  |  First Published Apr 2, 2024, 11:35 AM IST

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு திசைகளிலும், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், கால சம்ஹாரர், கால பைரவர் உள்பட எட்டு பைரவர்கள் சிலைகள் உள்ளன.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கால பைரவருக்கு  சிறப்பு பூஜை தீபாரதனை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு திசைகளிலும், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், கால சம்ஹாரர், கால பைரவர் உள்பட எட்டு பைரவர்கள் சிலைகள் உள்ளன.

Latest Videos

undefined

தேய்பிறை அஷ்டமி நாளில் எட்டு பைரவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்து வருகிறது. தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. 

தொடர்ந்து, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி யொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது.

click me!