Sabarimala Temple : சபரிமலையின் 7 புனித அம்சங்கள்!!

By Kalai Selvi  |  First Published Apr 2, 2024, 10:31 AM IST

ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலையின் 7 புனித அம்சங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..


புனித திருதலங்களில் ஒன்று சபரிமலை. இது எழில் மிகுந்த புனித பூமி என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரங்கங்கள் படி, இந்த திருத்தலத்திற்கு யாத்திரை சென்று, தரிசனம் செய்வது, அங்கு இருக்கும் புனிதத் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐயப்பன் எழுந்தருளியுள்ள இந்த சபரிமலையில் 7 அம்சங்களைக் கொண்டு திகழ்கிறது. எனவே, இக்கட்டுரையில் அந்த 7 அம்சங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

7 அம்சங்களைக் கொண்ட சபரிமலை:

Latest Videos

undefined

சபரிமலை: பதினெட்டு மலைகள் சூழ்ந்தநிலையில், இருக்கும் சபரிமலையானது எல்லா மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில், இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசங்கராந்தி அன்று ஜோதி உருவமாய், பொன்னம் பல மேட்டில் ஐயப்பன் காட்சி அளிப்பாராம்.

பம்பை: சபரிமலை பம்பை நதிக்கரையில் முனிவர்கள் குடில்கள் அமைத்து யாகம் செய்தத்காக புராணங்கள் கூறுகிறது. இதனால் இந்த இடம் மகாயாகம் நடந்த யாக பூமி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இன்றும் கூட ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதை நம்மால் பார்க்க முடியும்.

மகிஷன்: மகிஷன் என்பவர் ரம்பாசுரனின் மகன். இவர் தவம் இருந்து பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்றதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த வரத்தை பெற்ற ஆணவத்தால் மகிஷன்
தேவர்களைத் துன்புறுத்தியுள்ளான். இதனால் தேவர்கள் பராசக்தியை வேண்டினர். அவர்களின் வேண்டுதலைக் கேட்ட பராசக்தி, மகிஷனிடம் போர்புரிந்து அவனை வதைத்தாள். எனவே, தான் இந்த இடம் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலி பூமி என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாளில் 204 கோடி வசூல்: தேசவசம் போர்டு தகவல்

ராம இலட்சுமணன்: பம்பை நதி உருவான கதை இங்கு தான் ஆரம்பித்தது. எப்படியெனில், ஒருமுறை ராம இலட்சுமணன் இருவரும் தேவியைத் தேடி கானகத்தில் அலைந்து திரிந்தனர். 
அப்போது மதங்க மாமுனிவரின் ஆசிரமம் இருப்பதைக் கண்ட அவர்கள் அங்கு சென்றார்கள். அங்கு நீலி என்ற பெண் இருந்தாள். அவள் ராம லட்சுமணணை வரவேற்று, தான் இங்கு முனிவருக்குப் பணிவிடை செய்வதாகவும், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்றும் கூறினாள். இதை கேட்ட ராமர் மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதால்,  உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபடில்லை என்று கூறியதோடு மட்டுமின்றி, எல்லாரும் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்தப் பெண்ணை அழகான அருவியாக மாற்றினார். அந்த அருவி தான் பம்பை நதி ஆகும். இந்த பம்பா நதியானது தட்சிண கங்கை என்று சிறப்புப் பெயர் பெற்றது.

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை தவமிருந்து வழிபட்டனர். அவர்கள்முன் தோன்றி தேவி, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்..? என்று வினவினாள். அதற்கு அவர்கள் தங்களின் விஸ்வரூப தரிசனத்தை தருமாறு கேட்டனர்.  உடனே தேவியும் அவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தாள். அதுமட்டுமின்றி, தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தியை வைத்துக்கொண்டிருந்தால். அதுதான் மகாசாஸ்தா. இதனைக் கண்ட சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏக காலத்தில் இந்த மகாசக்தி தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தனர். அவர்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட தேவி, அவர்கள் விருப்பம் நிறைவேற ஆசிபுரிந்தாள். அதன்படி, தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்துவந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் மகாசாஸ்தா.

இதையும் படிங்க: அய்யப்ப பக்தருக்கு அடித்த ஜாக்பாட்! சபரிமலை சென்றவருக்கு புத்தாண்டு லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு!

பம்பா உற்சவம்: ஐயப்பன், மகிஷனின் சகோதரியான மகிஷியை வதம் செய்தார். இதனால் இந்த இடம் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமியானது. மேலும், இந்த பம்பை நதிக்கரையில் மகரவிளக்குப் பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறும். அதனால் தான் இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர் வந்தது.

சபரி: ராமாயண காலத்தில், சபரி என்ற  ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததால், அவள் ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களைக் கொடுத்து மிகவும் அன்பாக உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்தால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தவ பூமியாகவும் போற்றப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!