திருப்பதி கோயில் பற்றியும் ஏழுமலையான் பற்றியும் பலருக்கும் தெரியாத பல ஆச்சர்ய தகவல்கள் உள்ளன.
உலகின் பணக்கார கடவுளாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் திருப்பதி கோயில் பற்றியும் ஏழுமலையான் பற்றியும் பலருக்கும் தெரியாத பல ஆச்சர்ய தகவல்கள் உள்ளன.
ரகசிய கிராமம் :
undefined
திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் மலர்கள், வெண்ணெய், பால், தயிர், துளசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. திருப்பதி அருகே உள்ள மிகச்சிறிய கிராமத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அந்த கிராமத்திற்கு வெளியாட்கள் யாரும் செல்லக் கூடாதாம். இந்த கிராமத்தை பற்றிய சரியான தகவல்கள் கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகிசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மையம் இல்லை, ஓரம் :
திருப்பதி கோயில் கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பெருமாள் இருப்பது கருவறையின் மையப் பகுதி இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், கருவறையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு ஓரத்தில் தான் பெருமாள் நிற்கும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
உண்மையான முடி :
திருப்பதியில் கோயிலில் உள்ள பெருமாளின் முடி, அச்சு அசலாக உண்மையான முடியை போலவே இருக்குமாம். மிகவும் மென்மையான நீண்ட தலைமுடியுடம் பெருமாள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முறை, பெருமாளுக்கு தலையில் காயம் ஏற்பட்ட போது, நீலா தேவி என்ற கந்தர்வ இளவரசி, தனது முடியின் ஒரு பகுதியை எடுத்து, அதை வைத்து காயத்திற்கு கட்டுப்போட்டாராம். அப்பெண்ணின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போன பெருமாள் அதை ஏற்றுக்கொண்டாராம். இதனால் பெருமாள் உண்மையான முடியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திருப்பதிக்கு வரும் பக்தர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் எனவும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு மொட்டை போடும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
அலை ஓசை :
திருப்பதி கோயிலில் உள்ள ஏழுமலையான் விக்ரகத்திற்கு அருகில் காதை வைத்து கேட்டால் அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்குமாம்.
கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கணுமா? இந்த எளிய பரிகாரங்களை செய்தால் போதும்..
அணையா விளக்கு :
பெருமாளுக்கு முன் இருக்கும் மண் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாம். எனினும் இந்த விளக்கை யார், எப்போது ஏற்றினார் என்பது யாருக்கும் தெரியாதாம். ஆனால் பல ஆண்டுகளாக இந்த விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
நேரில் தோன்றிய பெருமாள் :
19-ம் நூற்றாண்டில், திருப்பதி பகுதியை ஆண்ட மன்னர் கொடூர குற்றம் புரிந்த 12 பேருக்கு மரண தண்டனை விதித்தார். மன்னரின் உத்தரவின் பேரில் 12 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். அவர்கள் இறந்த பின்பு, அந்த குற்றவாளிகளின் உடல், பெருமாள் கோயில் சுவற்றில் தொங்கவிடப்பட்டது. அப்போது பெருமாள் நேரில் தோன்றியதாக கூறப்படுகிறது.
ஈரப்பதம்:
திருப்பதி ஏழுமலையான கோயிலில், பெருமாள் சிலைக்கு பின்னால் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்குமாம். புரோகிதர்கள் பலமுறை முயற்சி செய்தும், அதை உலர வைக்க முடியவில்லை.
தேங்கி நிற்கும் மாலைகள்:
காலை மாலை பூஜையின் புதிய மாலைகள் சாற்றப்படும் போது, ஏற்கனவே போடப்பட்ட மாலைகளை கர்ப்ப கிரகத்திற்கு வெளியே எடுத்து வரக்கூடாது என்பது திருப்பதி கோயிலின் விதி. இதனால் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலைகளை, சிலைக்கு பின்னால் இருக்கும் நீரோடையில் சேர்த்து விடுகின்றனர். இந்த மாலைகளை, திருப்பதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள வேர்பேடு என்ற இடத்தில் தேங்கி நிற்பதை பார்க்க முடியும்.
அறிவியலுக்கு சவால் விடும் சிலை :
ஏழுமலையான் சிலை மீது எப்போது பச்சை கற்பூரம் பூசப்பட்டிருக்கும். ஆனால் பச்சை கற்பூரத்தை எந்த கல்லின் மீது பூசினாலும், அது அப்பொருளில் விரிசலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஆனால் ஏழுமலையானின் சிலையில் இதுவரை பச்சை கற்பூரம் பூசப்பட்டதற்கான அடையாளமே இருக்காது. பச்சைக் கற்பூரத்தில் உள்ள வேதி பொருளுக்கு எதிரான ஏழுமலையானின் சிலை தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது.
வியர்வையுடன் இருக்கும் சிலை :
திருப்பதி ஏழுமலையானின் கல்லால் ஆனது தான் என்றாலும் இது உயிர்ப்புடன் உள்ளது. ஆம். பெருமாளின் உடல் எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை தக்க வைத்து கொண்டுள்ளது. திருமலை, 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், பெருமாளின் உடல் மட்டும் 110 டிகிரி வெப்பநிலையில் சூடாகவே இருக்குமாம்.
தினமும், காலையில் அபிஷேகம் முடிந்த பிறகு, ஏழுமலையான் திருமேனி மீது வியர்வை காணப்படுமாம். அவற்றை புரோகிதர்கள் பட்டு துணியால் துடைப்பார்களாம். மேலும் வியாழக்கிழமைகளில், அபிஷேகத்திற்கு, ஏழுமலையானின் நகைகளை புரோகிதர்கள் அகற்றினால் அது மிகவும் சூடாக இருக்குமாம்.
வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.. அதை எப்படி சரி செய்வது?