கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கணுமா? இந்த எளிய பரிகாரங்களை செய்தால் போதும்..

By Ramya s  |  First Published Jun 9, 2023, 5:45 PM IST

கண் திருஷ்டி பிரச்சனை இருந்தாலே, வீட்டில் உள்ளவர்களுக்கு மாறி மாறி உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.


கல்லடியில் இருந்து தப்பினாலும், கண்ணடியில் இருந்து தப்ப முடியாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆம். கண் திருஷ்டி பிரச்சனை இருந்தாலே, வீட்டில் உள்ளவர்களுக்கு மாறி மாறி உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திடீர் பணக்கஷ்டம், மன ரீதியான கஷ்டம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடக்காது. தொழிலில் எந்த முன்னேற்றமும் இருக்காது. கண் திருஷ்டி காரணமாகவே இந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே கண் திருஷ்டி நீங்க சில எளிய பரிகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் ஓயாமல் சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கா? 48 நாட்கள் இந்த எளிய பரிகாரம் செய்தால் போதும்..

Latest Videos

undefined

ஒரு சிலர் கண் திருஷ்டி படக் கூடாது என்பதற்காக உருளியில் தண்ணீர் ஊற்றி மலர்களை பரப்பி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ, வீட்டின் வாசல் எதிரே பெரிய நிலை கண்ணாடியை வாசல் எதிரே மாட்டி வைத்திருப்பர். மேலும் ஒரு சில கடைகளில், கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை பழத்தை போட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் கண் திருஷ்டியை போக்க சில எளிய பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் கண் திருஷ்டி நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

கண் திருஷ்டி நீங்க, தெரு மண், உப்பு, மூன்று மிள்காய், கடுகு சேர்த்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வீட்டில் உள்ள எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே இதனை செய்ய முடியும்.

நம் வீட்டிற்குள் தீய சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும் கண் திருஷ்டி விலகவும், பௌர்ணமி தினத்தன்று வீட்டு வாசலில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம்.

வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம்.

சனி அல்லது ஞாயிறுகளில் மாலை நேரத்தில் ஏலக்காய், கிராம்பு, 3 அல்லது 4 கிராம்பு சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது 3 அல்லது 4 கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது வீட்டின் அனைத்து அறைகளிலும் அதனை காட்ட வேண்டும்.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும்.

வீட்டின் தலைவாசலின் மேற்பகுதியில் படிகாரம் கல்லை கருப்பு நிறம் கயிற்றில் கட்டி தொங்கவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டின் மீது படும் கண் திருஷ்டி அகன்றுவிடும்.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.. அதை எப்படி சரி செய்வது?

click me!