நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்றாலோ அல்லத் அவர்களின் சாபம் நமக்கு இருந்தாலும் நம் வீட்டில் ஓயாமல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.
எந்த வீட்டில் பிரச்ச்னை இருக்காது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் சிலரின் வீடுகளில் சண்டை அல்லது பிரச்சனை வந்தாலும் ஓரிரு நாட்களில், சரியாகிவிடும். ஆனால் ஒரு சிலரின் வீடுகளில் காரணமஏ இல்லாமல் சண்டை வந்து கொண்டே இருக்கும். தேவையே இல்லாமல் அடிக்கடி சண்டை வரும். சண்டை எப்படி ஆரம்பித்தது என்றே தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் முன்னோர்கள் ஒரு எளிய பரிகார முறையை சொல்லி உள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்றாலோ அல்லத் அவர்களின் சாபம் நமக்கு இருந்தாலும் நம் வீட்டில் ஓயாமல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த பரிகாரம் உதவும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை செய்யும் பூஜையுடன் இந்த பூஜையையும் சேர்த்து செய்ய வேண்டும். ஒரு வெள்ளை பேப்பரில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயர்கள் எத்தனை தெரியுமோ அத்தனை பேரையும் எழுதி வைக்க வேண்டும்.
undefined
பின்னர் ஒரு வெள்ளை துணியில் நான்கு வெற்றிலை, இரண்டு பாக்கு, ஒரு கைப்பிடி பச்சரிசியை மஞ்சள் தூளில் கலந்து அட்சதை, ஒரு கைப்பிடி அளவு நெய் ஒரு ரூபாய் நாணயம், இரண்டு விரலி மஞ்சள் ஆகியவற்றுடன், நீங்கள் எழுதி வைத்த முன்னோர்களின் பெயர்கள் அடங்கிய காகிதத்தையும் வைத்து அந்த வெள்ளை துணியை முடிச்சாக கட்ட வேண்டும். பின்னர் உங்கள் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை முதலில் வேண்டி, பின்னர் முன்னோரையும் வழிபட வேண்டும்.
இப்படி வழிபடுவதால் குடும்பத்திற்கு உள்ள கண் திருஷ்டி, தோஷம் ஆகியவை இருந்தால் சரியாகும் என்று நம்பப்படுகிறது. 48 நாட்கள் இந்த முடிச்சை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யவேண்டும். தினமும் கற்பூர ஆராதானை காட்ட முடியவில்லை என்றாலும், மாலை நேரம் விளக்கேற்றும் போது ஊதுவத்தி, தூபம் மட்டும் காட்டி வழிபட வேண்டும்.
48 நாட்கள் முடிந்த பிறகு அந்த முடிச்சில் உள்ள அரசி, நெல்லை பறவைகளுக்கு உணவாக போட்டுவிடலாம். மீதமுள்ள பொருளை கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். அதில் இருக்கும் ஒரு ரூபாயை கோயில் உண்டியலில் சேர்த்துவிடலாம். இந்த பரிகாரத்தை முடித்த பிறகு உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளின்றி நிம்மதியான சூழல் நிலவும்.