இலங்கை உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் முருகபெருமானுக்கு கோயில்களை கட்டியெழுப்பும் பணியில் சற்குரு ஸ்ரீ சரவண பாபா தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழ் கடவுள் முருகனுக்கு உலகின் சில நாடுகளில் கோயில்கள் இருக்கின்றன. இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில் 3 மாபெரும் முருகன் கோயில்களை கட்ட லண்டனைச் சேர்ந்த சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி முடிவு செய்துள்ளார். தமிழ் கடவுளான முருகபெருமானி நாமத்தை உலகின் எல்லா மூலைகளிலும் பரப்ப திடசங்கல்பம் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இவர் லண்டனி ஏற்கனவே மாபெரும் முருகன் கோயிலை மறுசீரமைத்து கட்டியுள்ளதாக கூறியுள்ளார். கனடா நாட்டில் முருகன் கோயில் கட்ட பெரிய நிலத்தை வாங்கி, அங்கும் கூட முருகனின் திருக்கோயிலை கட்ட தொடங்கிவிட்டதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் ற்குரு ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார்.
undefined
இதையும் படிங்க: உங்களுக்கு பணக்கஷ்டம் ஜென்மத்துக்கும் வராது.. துளசி வேரை இப்படி யூஸ் பண்ணுங்க!!
இலங்கை, லண்டன், கனடா மட்டுமின்றி சுவிஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும், ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து கோயில்களை கட்டும்பணிகள் நடந்து வருவதாக சற்குரு ஸ்ரீ சரவண பாபா கூறியுள்ளார். இலங்கையில் கட்டப்பட்டு வரும் 3 முருகன் கோயில்களை சேர்த்து உலகளவில் மொத்தமாக 9 கோயில்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இந்தாண்டு தொடக்கத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டில் இந்த வடிவத்தில் கடிகாரம் வைத்தால் நிம்மதியே இருக்காது உஷார்!!