கழிப்பறையும் குளியலறையும் இணைந்திருந்தால் பிரச்சனையா? குளியலறை வாஸ்து பிரச்சனையை தடுக்க எளிய பரிகாரம்!!

By Ma riyaFirst Published Jun 7, 2023, 4:57 PM IST
Highlights

உங்களுடைய வீட்டில் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி பிரச்சனைகள் வருகிறதா? குளியலறையின் வாஸ்து குறைபாடுகள் கூட காரணமாக இருக்கலாம். அதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்களை செய்து பாருங்கள்.  

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் அனைத்து விஷயங்களும் வாஸ்து விதிகளின்படி இருக்க வேண்டும். இதை செய்தால் தான் வீட்டில் செழிப்பு நிலைத்திருக்கும். மகிழ்ச்சியும் பெருகும். வீட்டில் வாஸ்து விதிகள் பின்பற்றப்படாவிட்டால், அந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கலாம். உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், உங்கள் வேலைகள் அனைத்தும் தடைபடும். குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த வேலையிலும் வெற்றி பெறுவதில்லை. திருமணம் கைகூடாது. இது மட்டுமல்ல, உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். குளியலறையில் வாஸ்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என இங்கு காணலாம். 

குளியலறை வாஸ்து டிப்ஸ்: 

குளியலறையைப் பயன்படுத்திய பிறகு, அதனுடைய கதவை உடனடியாக மூடி வைக்க வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுவதற்கு குளியலறை திறந்த கதவு கிடப்பது மிகப்பெரிய காரணமாகும். உங்கள் குளியலறை வீட்டின் ஏதேனும் அறையுடன் இணைக்கப்பட்டிருந்தால், அதை மறந்தும் திறந்து போடவேண்டாம். மீறி குளியலறை கதவு திறந்தே இருந்தால், எதிர்மறை ஆற்றல் வீடு முழுவதும் பரவி உங்களுடைய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். 

கழிப்பறை மற்றும் குளியலறை இணைக்கப்பட்டால்...பிரச்சனையா? 

குளியலறை, கழிப்பறை இணைக்கப்பட்டிருந்தால், இரண்டிற்கும் இடையே ஒரு கதவு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாஸ்து படி, குளியலறை மற்றும் கழிப்பறை இணைக்கப்படக்கூடாது. இவை இணைந்திருந்தால் வாஸ்து தோஷங்களை உண்டாக்கும். வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும். இது உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குளியலறை வாஸ்து: 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு திசை குளியலறை அமைக்க சிறந்த இடமாக சொல்லபப்டுகிறது. உங்கள் வீட்டு குளியலறை தெற்கு திசையில் இருந்தால் வாஸ்து குறைபாடுகள் இருக்கலாம். இதைத் தவிர்க்க, குளியலறையில் சில தாவரங்கள் வையுங்கள். குளியலறையில் மங்கலான அல்லது சிவப்பு விளக்கு வைக்க வேண்டாம். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும், வாஸ்து குறைபாட்டையும் ஏற்படுத்தும்.

குளியலறையின் ஜன்னலை மூடி வைக்க வேண்டாம். அதை மூடி வைத்தால் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும். குளிக்கும்போது திறக்க முடியாத இடத்தில் ஜன்னல் இருந்தால், குளியலறையில் யாரும் இல்லாத நேரத்தில் திறந்து வையுங்கள். ஆனால் குளியலறையில் சூரிய ஒளி இருப்பது அவசியம். அனைத்து வகையான எதிர்மறை ஆற்றல்களும் குளியலறையின் திறந்த ஜன்னல் வழியாக வெளியேறும். 

குளியலறையைப் பயன்படுத்திய பிறகு அதை ஈரமாக விடக்கூடாது. அத்தகைய குளியலறை வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும். குளியலறையைப் பயன்படுத்திய பிறகு அதை முழுமையாக உலர்த்துவது நல்லது. ஜன்னலை திறந்து வையுங்கள். 

குளியலறை குழாயை மூடிய பிறகும் தண்ணீர் சொட்டும் வகையில் வைக்கவேண்டாம். தொடர்ந்து தண்ணீர் சொட்டினால் பண இழப்பு ஏற்படும். வாஸ்து படி ஒரு குழாயில் இருந்து தண்ணீர் வீணாகும் வகையில் உங்கள் கையிலிருந்து பணமும் கரைகிறது என நம்பப்படுகிறது. 

எளிய பரிகாரம்

குளியலறையின் வாஸ்து குறைபாடுகளை நீக்க படிகாரத்தை வைத்திருங்கள். நீங்கள் வைக்கும் படிகாரத்தை யாரும் பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். இந்த வாஸ்து குறிப்புகள் அனைத்தையும் நினைவில் நிறுத்தி, குளியலறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரிசெய்யுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். 

click me!