மடப்பள்ளி ஊழியர்கள் லட்டின் ருசியும் தரமும் குறைய வாய்ப்பே கிடையாது என்றும், காலம் காலமாக முன்னோர்கள் பின்பற்றிய முறையில்தான் இன்று வரை லட்டு பிரசாதத்தைத் தயாரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
திருப்பதி என்றவுடன் ஏழுமலையானுடன் சேர்ந்து லட்டு பிரசாதமும் ஞாபகத்துக்கு வந்துவிடும். உலக முழுவதும் பிரசித்த பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலை கோயில் லட்டு பிரசாதம் சமீப காலமாக தரம் குறைந்து விட்டது என்றும் அளவும் முன் போல இல்லை என்றும் பக்தர்கள் கூறியுள்ளனர்.
இதன் எதிரொலியாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் திங்கட்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைமுறை தலைமுறையாக மடப்பள்ளியில் லட்டு பிரசாதம் செய்பவர்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பக்தர்கள் கூறும் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
undefined
அப்போது, மடப்பள்ளி ஊழியர்கள் லட்டின் ருசியும் தரமும் குறைய வாய்ப்பே கிடையாது என்றும், காலம் காலமாக முன்னோர்கள் பின்பற்றிய முறையில்தான் இன்று வரை லட்டு பிரசாதத்தைத் தயாரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அயோத்தி ராமர் கோயில் கருவறையின் புகைப்படங்கள் வெளியீடு! இன்னும் 10% வேலை தான் பாக்கி!
கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய், நெய், முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, ஏலக்காய், பச்சை கற்பூரம் என அனைத்தும் தரமானவையாகவே பயன்படுத்தப்படுகின்றன என்றும் லட்டின் அளவும் கூடவோ குறையவோ வாய்ப்பு இல்லை என்றும் மடப்பள்ளி தொழிலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து இருந்தாலும் ஏதேனும் தவறு நேர்ந்திருக்கிறதா என்று விசாரணை நடத்துவதாக தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கோயில் இணை அதிகாரி லோகநாதம், பேஷ்கர் ஶ்ரீஹரி, மடப்பள்ளி பேஷ்கர் ஶ்ரீநிவாசுலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
12 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..