கும்பகோணம் ஸ்ரீ சீதளா தேவி ஆலய மகா கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

By Ramya s  |  First Published Dec 9, 2023, 8:43 AM IST

கும்பகோணம் அருகே  செருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீதளா தேவி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் செருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்பகலா சமேத ஹரிஹர புத்திர சுவாமி ஆலய ஸ்ரீ சீதலா தேவி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் மகாபூர்ணஹீதி யாத்ராஹோமம் , சோமகும்பபூஜை, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

undefined

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும்  ஆலயத்திற்கு நூதன கும்பாபிஷேகம் செய்வதற்கு திவ்ய கடங்கள் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும்  மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

100 வயதில் கன்னி சாமியாக சபரிமலை சென்ற மூதாட்டி.. ஐயப்பனை மனமுருக தரிசித்து நெகிழ்ச்சி..

click me!