சபரிமலை சாமி தரிசன நேரத்தை கேரள அரசு நீட்டித்துள்ளது. அதன்படி தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சபரிமலை கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் 10-12 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், கோவிலுக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது.
ஒரு நாளைக்கு 75,000 பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு தேவசம் போர்டுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் ஐஜி ஸ்பர்ஜன் குமார் தெரிவித்தார். தற்போதைய மூன்றாம் கட்ட யாத்திரையின் போது, ஆனலைன் மூலம் சுமார் 90,000 முன்பதிவுகளும், ஒவ்வொரு நாளும் ஸ்பாட் புக்கிங் மூலம் கிட்டத்தட்ட 30,000 பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் சபரிமலை சாமி தரிசன நேரத்தை கேரள அரசு நீட்டித்துள்ளது. அதன்படி தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருடன் தேவஸ்வம் அமைச்சர் கே ராதாகிருஷ்ணன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு நடை திறப்பதற்கு பதில் 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனவே இனி தினமும் மாலை சபரிமலை கோயில் நடை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும். அனைத்து பக்தர்களும் சுமூகமாக தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
100 வயதில் கன்னி சாமியாக சபரிமலை சென்ற மூதாட்டி.. ஐயப்பனை மனமுருக தரிசித்து நெகிழ்ச்சி..
அதன்படி இனி, பக்தர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை எழுந்ததை அடுத்து அரசு, தேவஸ்வம் போர்டு மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கையை அடுத்து, தரிசன நேரத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது.