2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழன் அன்று நிகழும். அன்று ஒரே நாளில் மூன்று வகையான சூரிய கிரகணம் தெரியும்.
ஒரு கிரகண நிகழ்வு ஜோதிட மற்றும் வானியல் பார்வையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 20 ஏப்ரல் 2023 அன்று நிகழும். இது பல வழிகளில் சிறப்பாக இருக்கும். மேஷத்தில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வியாழன் மேஷத்தில் வந்து சூரியனுடன் கூடுகிறது. பஞ்சாங்கப்படி, மிக முக்கியமானதாகக் கருதப்படும் வைஷாக அமாவாசை நாளில் கிரகணம் ஏற்படுகிறது.
ஏப்ரல் 20ஆம் தேதி ஒரே நாளில் மூன்று விதமான சூரிய கிரகணம் தெரியும் என்பது சிறப்பு. விஞ்ஞானிகள் இதை 'ஹைபிரிட்' சூரிய கிரகணம் என்று அழைக்கின்றனர். மேலும், இந்த கிரகணம் நிகலு சூரிய கிரகணம் அல்லது சங்கர சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
undefined
சூரிய கிரகணம்
வியாழன், 20 ஏப்ரல் 2023 அன்று காலை 07:04 மணிக்கு சூரிய கிரகணம் நிகழும். மதியம் 12:29 மணிக்கு கிரகணம் முடிவடையும். கிரகணத்தின் மொத்த கால அளவு 5 மணி 24 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அதனால் எல்லா மதச் செயல்பாடுகளையும் செய்யலாம்.
அண்டார்டிகா, தாய்லாந்து, சீனா, புருனே, சாலமன் தீவுகள், பிலிப்பைன்ஸ், தைவான், பப்புவா நியூ கினியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14ஆம் தேதி நிகழவுள்ளது.
சித்திரை மாத ராசி பலன்2023: சூரியன் உச்சத்தில் வருவதால் மிக எச்சிரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!
ஹைபிரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?
ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றிணையும் நிகழ்வு ஆகும். சந்திரனின் நிழல் பூமி மீது முழுவதும் விழுந்து நகர்ந்து, மற்றொன்றுக்கு மாறுகிறது. இந்த அரிய கிரகணத்தின்போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருட்டாக மாறும், இந்த விஷயத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. முழு சூரிய கிரகணத்தை திறந்த கண்களால் பார்ப்பது தீங்கு விளைவிக்கும்.